எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 2 ஜனவரி, 2022

பிடிகருணை மசியல்

பிடிகருணை மசியல் :-


தேவையானவை :-
கருணைக்கிழங்கு – கால் கிலோ, பச்சை மிளகாய் – 4, புளி - 1 நெல்லி அளவு, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, பெரிய வெங்காயம் – 1 பொடியாக அரியவும். உப்பு – அரை டீஸ்பூன், தாளிக்க :- கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், சோம்பு - கால் டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு, எண்ணெய் – 4 டீஸ்பூன்.

செய்முறை :-

கருணைக்கிழங்கை நன்கு கழுவி குக்கரில் வேகப்போட்டு தோலுரித்து மசித்துக் கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து கடுகு  போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும்,  கருவேப்பிலை போட்டு பச்சை மிளகாய்களை நான்காக கீறிப்போடவும். லேசாக வதங்கியதும் பெரியவெங்காயத்தை தண்ணீர் போல வதக்கவும். இதில் உப்பு , மஞ்சள் பொடி போட்டு மசித்த கருணையைப் போடவும். உப்பு புளியை அரை கப் நீரில் நன்கு கரைத்து ஊற்றவும். அடிக்கடிக் கிளறிவிட்டு நன்கு  சுருண்டு வரும்போது  இறக்கவும். தயிர் சாதத்துக்குத் தொட்டுக் கொள்ள சிறப்பாக இருக்கும் 

செவ்வாய், 28 டிசம்பர், 2021

கொத்துமல்லி தேங்காய் சம்மந்தி

கொத்துமல்லி தேங்காய் சம்மந்தி:-



தேவையானவை :- மல்லி - 1 கட்டு, பச்சை மிளகாய் - 4, தேங்காய் - கால் மூடி, சின்ன வெங்காயம் - 2, பூண்டு - 1 பல், புளி - 1 சுளை, உப்பு - கால் தேக்கரண்டி, பெருங்காயம் - 1 துண்டு.

செய்முறை:- மல்லியை சுத்தம் செய்து நன்கு அலசி பொடியாக நறுக்கவும் ( இல்லாவிட்டால் மிக்ஸியில் மாட்டிக் கொள்ளும் ) . வெங்காயம் பூண்டை உரித்து இரண்டாக நறுக்கவும்.  பச்சை மிளகாய் வெங்காயம் வெள்ளைப்பூண்டு, உப்பு, புளி பெருங்காயத்தை மிக்சியில் சிறிது அரைத்துக் கொண்டு அதன் பின் தேங்காயைச் சேர்த்து அரைத்து அதன் பின் மல்லியை மிக்சி கொள்ளும் வரை சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு மைய அரைத்தெடுக்கவும். சூடான இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும். சாதத்தில் நெய் விட்டு இத்துவையலைப் போட்டுப் பிசைந்தும் சாப்பிடலாம். தயிர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ளவும் அருமையாக இருக்கும். 
 

புதன், 22 டிசம்பர், 2021

காரட் தக்காளி சூப்

காரட் தக்காளி சூப்


தேவையானவை:- காரட் - 1, தக்காளி - 2, பெரிய வெங்காயம் - 1, உப்பு - அரை டீஸ்பூன், மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன், வெண்ணெய்  அல்லது க்ரீம் - ஒரு டீஸ்பூன் விரும்பினால்

செய்முறை:- காரட், வெங்காயத்தைத் தோலுரித்துத் துண்டுகள் செய்து தக்காளியுடன் குக்கரில் இரண்டு கப் நீரூற்றி வேகப்போடவும். இரண்டு விசில் வந்ததும் இறக்கி ஆறியதும் நீரில்லாமல் எடுத்து மிக்ஸியில் போட்டு மசிக்கவும். திரும்ப அதே நீரில் அரைத்ததை வழித்து ஊற்றிக் கொதிக்க விடவும். கொதித்ததும் இறக்கி உப்பு, மிளகுத்தூள்,  வெண்ணெய் சேர்த்துக் கலந்து அருந்தக் கொடுக்கவும். 


 

சோளா பூரி

சோளா பூரி :-



தேவையானவை:- மைதா மாவு - அரை கப், வெள்ளை ரவை - அரை கப், ஆட்டா ( கோதுமை மாவு) - அரை கப், உப்பு - 1/2 டீஸ்பூன். எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:- ரவை, மைதா, கோதுமை மாவுகளை ஒரு பௌலில் போட்டு உப்பு சேர்த்து ஒரு கப் நீர் விட்டு மென்மையாகப் பிசையவும். பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகள் எடுத்து பூரிகளாகத் தேய்த்து எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுக்கவும். சன்னா மசால் ( கறுப்பு அல்லது வெள்ளைக் கொண்டைக்கடலை மசாலாவுடன் )  , வெங்காயத்துடன் பரிமாறவும். 
 

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

பரங்கிக்காய் புளிக்கறி

பரங்கிக்காய் புளிக்கறி:---


தேவையானவை :-
பரங்கிக்காய் – 1 கீத்து, சின்ன வெங்காயம் – 8, வெள்ளைப் பூண்டு – 4, வரமிளகாய் – 4, சாம்பார் பொடி – 1 டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 1டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து -  1 டீஸ்பூன், சோம்பு – கால் டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு, வெல்லம் – சிறு துண்டு.

செய்முறை:- பரங்கிக்காயை விதை நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயம் வெள்ளைப்பூண்டை உரித்து இரண்டாக வெட்டிக் கொள்ளவும். புளியை உப்புப் போட்டு அரைகப் தண்ணீரில் ஊறவைக்கவும்.

கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் வரமிளகாயைக் கிள்ளிப் போட்டு சோம்பு கருவேப்பிலை தாளித்து வெங்காயம் வெள்ளைப் பூண்டைப் போட்டு வதக்கவும். ஒரு நிமிடம் வதங்கியதும் பரங்கிக்காயைக் கழுவிச் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் வதக்கி சாம்பார் பொடி போட்டு புளியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றவும். நன்கு கிளறி விட்டுக் கொதி வந்ததும் அடக்கி வைத்து மூடி போட்டு 10 நிமிடம் சிம்மில் வேக விடவும். வெந்ததும் இறக்குமுன் வெல்லம் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

 
Related Posts Plugin for WordPress, Blogger...