எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 31 அக்டோபர், 2022

பாசிப்பருப்பு மசியல்:-

பாசிப்பருப்பு மசியல்:-


தேவையானவை:- பாசிப்பருப்பு – ஒரு கப், சீரகம் – 1 டீஸ்பூன், பூண்டு – 2 பல், மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, உப்பு – கால் டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு, எண்ணெய் – அரை டீஸ்பூன், தாளிக்க:- உளுந்து, சீரகம் தலா கால் டீஸ்பூன், வரமிளகாய் – 1.

செய்முறை:- பாசிப்பருப்பில் அரை கப் நீரூற்றி, சீரகம் மஞ்சள்தூள் சேர்த்துப் பூண்டைத் தட்டிப் போட்டு குக்கரில் ஒரு விசில் வேகவைத்து இறக்கவும். எண்ணெயில் உளுந்து சீரகம் கருவேப்பிலை இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய் தாளித்துப் பருப்பில் கொட்டி உப்பு சேர்த்து மசிக்கவும். சாதத்தில் இந்த மசித்த பருப்பைப் போட்டு நெய் ஊற்றிப் பிசைந்து சாப்பிடலாம்

 

வியாழன், 27 அக்டோபர், 2022

பொட்டுக்கடலை மாவுருண்டை:-

பொட்டுக்கடலை மாவுருண்டை:-


தேவையானவை:- பொட்டுக்கடலை – 2 கப், சர்க்கரை – ஒரு கப், நெய் – அரை கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை. உப்பு – 1 சிட்டிகை.

செய்முறை:- பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடித்து நைஸாக சலிக்கவும். சர்க்கரையையும் பொடித்துச் சலிக்கவும். நெய்யை உருக்கவும். பொட்டுக்கடலைப் பொடி, சர்க்கரைப் பொடி , ஏலப்பொடி, உப்பு கலந்து நெய்யை சூடாக ஊற்றி உருண்டைகள் பிடிக்கவும்.

 

புதன், 26 அக்டோபர், 2022

முந்திரி உருண்டை. :-

முந்திரி உருண்டை. :-


தேவையானவை:- முந்திரி – கால் கப், பாசிப்பருப்பு – கால் கப், கடலை மாவு – கால் கப், நெய் – கால் கப், சர்க்கரை – அரை கப்

செய்முறை:- முந்திரியை வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்து வைக்கவும். பாசிப்பருப்பைப் பொன்னிறமாக வறுத்துப் பொடிக்கவும். சர்க்கரையைப் பொடித்து வைக்கவும். நெய்யில் முதலில் கடலைமாவைப் போட்டு நன்கு வாசம் வந்து சிவக்கும் வரை மிதமான தீயில் வறுக்கவும். அதில் பொடித்த முந்திரி, பயத்த மாவு, சர்க்கரைப் பொடி சேர்த்து நன்கு கலக்கி சூட்டுடன் உருண்டை பிடிக்கவும்.

 

திங்கள், 24 அக்டோபர், 2022

கடலைப்பருப்பு கூட்டு:-

கடலைப்பருப்பு கூட்டு:-


தேவையானவை;- கடலைப்பருப்பு – 1 கப், பெரிய வெங்காயம் – 1, தேங்காய்த்துருவல் -1 டேபிள் ஸ்பூன், சாம்பார் பொடி – அரை டீஸ்பூன், தாளிக்க :- கடுகு, உளுந்து எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், வரமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு. உப்பு – கால் டீஸ்பூன். பெருங்காயப் பொடி – 1 சிட்டிகை.

செய்முறை:- கடலைப்பருப்பைக் களைந்து சிறிது நேரம் ஊறவைக்கவும். அரைக் கப் நீரூற்றி குக்கரில் ஒரு விசில் வேகப்போடவும். வெந்ததும் திறந்து பொடியாக அரிந்த வெங்காயம், சாம்பார் பொடி போட்டுக் கொதிக்க விடவும். இரண்டு நிமிடங்கள் கொதித்ததும் உப்பு சேர்க்கவும். எண்ணெயில் கடுகு உளுந்து இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய், கருவேப்பிலை பெருங்காயப்பொடி தாளித்துக் கொட்டித் தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கவும்.

 

வியாழன், 20 அக்டோபர், 2022

உக்காரை:-

உக்காரை:-


தேவையானவை:-,பாசிப் பரு‌ப்பு - 1 க‌ப், சீனி  - 1 க‌ப், இடியாப்ப மாவு – 1 டேபிள் ஸ்பூன், தே‌ங்கா‌ய் துருவ‌ல் - 1 டேபிள் ஸ்பூன், நெய் – 1 டேபிள் ஸ்பூன், மு‌ந்‌தி‌ரி – 15, ஏல‌க்கா‌ய் - 2

செ‌ய்முறை:- பாசிப்பருப்பைக் கழுவி வேகப்போடவும். முக்கால் பதம் வெந்ததும் அதில் இருக்கும் தண்ணீரிலேயே சிறிது நெய்யில் வறுத்த இடியாப்பமாவைப் போடவும். நன்கு கிளறி பருப்பும் மாவும் சேர்ந்து வெந்து வந்ததும் சீனியைப் போடவும். சீனி கரைந்து வரும்போது தேங்காய்த் துருவலும் சேர்க்கவும். நன்கு கிளறி கெட்டியாகும்போது நெய்யில் முந்திரி பொரித்துப் போடவும். ஏலக்காயைப் பொடித்துப் போட்டு கிளறி இறக்கவும்.

 
Related Posts Plugin for WordPress, Blogger...