எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 18 ஜனவரி, 2017

கார்த்திகை தீபம் ரெசிப்பீஸ், KARTHIGAI DEEPAM RECIPES.

கார்த்திகை தீபம் ரெசிப்பீஸ் 

1. தேன் மிட்டாய்
2. மிக்ஸ்ட் வெல்லப் பொரி
3. தினைக் கொழுக்கட்டை
4. காய்கறிப் பொரி
5. மைதா ஸ்கொயர்ஸ்
6. கோதுமை மாவு சுருள் முறுக்கு
7. பூந்தி அச்சு மிட்டாய்
8. நட்ஸ் சிக்கி
9.பால் பொங்கல்
10. சேமியா பழப்பாயாசம்.

1.தேன் மிட்டாய்:-
தேவையானவை:- புழுங்கல் அரிசி – 2 கப், உளுந்து – அரை கப், சர்க்கரை –
2 கப், தண்ணீர் - கால் கப், ரெட் ஃபுட் கலர் – சிறிது, எண்ணெய் பொரிப்பதற்கு.

செய்முறை:- புழுங்கல் அரிசியையும் உளுந்தையும் களைந்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். நன்கு நைஸாக இட்லி மாவு பதத்தில் அரைத்து எடுக்கவும். ஆரஞ்சு கலர் சேர்த்து பிசைந்து வைக்கவும். சர்க்கரையில் தண்ணீர் ஊற்றி மென்பாகு வைக்கவும்.ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து குட்டி ஸ்பூனால் அல்லது விரல்களினால் துளித்துளியாகக் கிள்ளிப் போடவும். பொரிந்து மேலே வந்ததும் மிதமான சூட்டில் உள்ள சர்க்கரைப் பாகில் போட்டு ஐந்து நிமிடங்கள் ஊறியதும் வேறொரு பாத்திரத்துக்கு மாற்றவும்

 2.மிக்ஸ்ட் வெல்லப் பொரி. :-
தேவையானவை:- அரிசி, கம்பு, கேப்பை, எள்ளு, அவல்,ஓட்ஸ், வேர்க்கடலை, பொட்டுக்கடலை, தேங்காய்ப் பல் – தலா ஒரு டேபிள் ஸ்பூன், வெல்லம் கால் கிலோ.  ஏலத்தூள் – 1 சிட்டிகை, நெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- அரிசி, கம்பு கேப்பை, எள்ளு, அவல், ஓட்ஸ், வேர்க்கடலை, பொட்டுக்கடலை ஆகியவற்றை தனித்தனியாக வெறும் வாணலியில் பொரித்துப் போடவும். வெல்லத்தைப் பொடியாக்கி தண்ணீர் ஊற்றி முத்துப்பாகு வைக்கவும். இன்னொரு வாணலியில் நெய்யை ஊற்றி தேங்காயை வறுக்கவும். அதில் எல்லாப் பொரியையும் போட்டுப் புரட்டி வெல்லப் பாகில் கொட்டிக் கிளறி உடனடியாக அடுப்பை அணைக்கவும். ஏலப்பொடியைத் தூவி திரும்பக் கிளறவும்.உதிர் உதிராகிவிடும். நிவேதிக்கவும்.


3.தினைக் கொழுக்கட்டை:-

தேவையானவை:- தினை – 1 கப், பாசிப்பருப்பு துவரம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், சீரகம், உளுந்து – தலா ஒரு டீஸ்பூன், கருவேப்பிலை – இணுக்கு, வரமிளகாய் – 2 பொடியாகக்  கிள்ளவும். எண்ணெய்- 3 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன். உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை:- தினை பாசிப்பருப்பு துவரம்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி இறக்கவும். எண்ணெயைக் காயவைத்து உளுந்து சீரகம் தாளித்து வரமிளகாய் கருவேப்பிலை போடவும். இதில் அரைத்த விழுதைக் கொட்டிக் கிளறி தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும். நன்கு பிசைந்து கொழுக்கட்டைகளாக உருட்டி இட்லிப் பாத்திரத்தில் 20 நிமிடம் வேகவைத்து இறக்கி நிவேதிக்கவும்.

4. காய்கறிப் பொரி. :-

தேவையானவை;- பொரி – 2 கப், துருவிய காரட், பீட்ரூட்,தக்காளி - தலா ஒரு டேபிள் ஸ்பூன், சின்ன வெங்காயம் – 2 துருவவும், கொத்துமல்லித்தழை – பொடியாக அரியவும். மிளகுத்தூள் – 1 சிட்டிகை, எலுமிச்சை சாறு – சில சொட்டு. தக்காளி சாஸ் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:- ஒரு பௌலில் துருவிய காரட், பீட்ரூட், தக்காளி, சின்னவெங்காயம் கொத்துமல்லித்தழை போட்டு மிளகுத்தூள், தக்காளி சாஸ், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து வைக்கவும். சாப்பிடப் போகும்போது பொரியைக் கலந்து கொடுக்கவும். பொரியில் உப்பு இருப்பதால் உப்பு போட வேண்டாம்.   

5.மைதா ஸ்கொயர்ஸ் :-

தேவையானவை:- மைதா – ஒரு கப், உப்பு, சோடாப்பூ – தலா ஒரு சிட்டிகை, சர்க்கரை – 1 கப், எண்ணெய் – பொரிப்பதற்கு. நெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- ஒரு பௌலில் மைதாவைப் போட்டு உப்பு சோடாப்பூ நெய் சேர்த்து உரசிப் பிசையவும். லேசாக நீர்  தெளித்து நன்கு கெட்டியாகப் பிசைந்து வைக்கவும். அரை இன்ச் கனமான சப்பாத்தியாக இட்டு சதுரம் சதுரமாக வெட்டவும். இதைக் காயும் எண்ணெயில் பொரித்தெடுத்து வைக்கவும். இன்னொரு பானில் சர்க்கரையைப் போட்டுக் கம்பிப்பதம் வரும்வரை காய்ச்சவும். இதில் பொரித்த மைதா ஸ்கொயர்ஸைப் போட்டுப் பாகு எல்லாப் பக்கமும் படும்படிப் புரட்டி எடுத்து வைக்கவும்.


6.கோதுமை மாவு சுருள் முறுக்கு :-

தேவையானவை:- கோதுமை மாவு – 1 கப், சிவப்பு மிளகாய்த்தூள் – முக்கால் கரண்டி, சீரகம் , ஓமம் தலா டீஸ்பூன், பெருங்காயம் – 1 சிட்டிகை, உப்பு – கால் டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- கோதுமை மாவை நன்கு கட்டி இட்லிப் பாத்திரத்தில் அல்லது குக்கரில் ஆவியில் 20 நிமிடம் வேகவைக்கவும். அதில் சிவப்பு மிளகாய்த்தூள் சீரகம், ஓமம்,, உப்பு பெருங்காயத்தூள் தூவி காய்ந்த எண்ணெயை சிறிது ஊற்றி நன்கு பிசையவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். எண்ணெயைக் காயவைத்து சுருள் முறுக்கு அச்சில் பிழிந்து பொன்னிறமானதும் எடுக்கவும்.

7. பூந்தி அச்சு மிட்டாய்.:- 

தேவையானவை:- கடலை மாவு – ஒன்றரை கப், அரிசி மாவு – 1 கப், வெல்லம் – ஒன்றரை கப், ஏலத்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு. ஜாரிணி கரண்டி – 1 , அரிகரண்டி – 1. நெய் – 1 டீஸ்பூன். 

செய்முறை:- கடலை மாவையும் அரிசி மாவையும் கலந்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். எண்ணெயைக் காயவைத்து பூந்தி ஜாரிணியில் ஊற்றி பூந்திகளாகப் பொரித்தெடுக்கவும்.வெல்லத்தில் அரை கப் தண்ணீர் ஊற்றி முத்துப் பாகு வைத்து பூந்தியையும் ஏலப்பொடியையும் கொட்டிக் கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி ஒரு நிமிடம் கழித்து சதுர வில்லைகள் செய்யவும். 

8.நட்ஸ் சிக்கி:- 

தேவையானவை:- முந்திரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட் – தலா கால் கப், சர்க்கரை – ஒரு கப், நெய் – 1 டீஸ்பூன். 

செய்முறை:- முந்திரி பாதாம் பிஸ்தா அக்ரூட்டை மிக்ஸியில் பெரபெரப்பாகப் பொடித்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு உருக விடவும். பொன்னிறமாக ஆகும் போது நெய்யை ஊற்றிக் கலக்கி அடுப்பில் இருந்து இறக்கி பொடித்த நட்ஸைப் போட்டு நன்கு கலக்கவும். நெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி நெய் தடவிய உருளையால் சமப்படுத்தி டைமண்ட் ஷேப்பில் வில்லைகள் போடவும்.

9. பால் பொங்கல். 

தேவையானவை:- பச்சரிசி – 2 கப், பால் 2 லிட்டர், சர்க்கரை – கால் கப்.

செய்முறை:- பச்சரிசியைக் களைந்து பாலில் வேகப்போடவும். அடிப்பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும். சாதம் வெந்து பால் குறுகி வந்ததும் நன்கு குழைத்து மசித்துச் சர்க்கரை சேர்த்துக் கிளறி இறக்கி நிவேதிக்கவும்.

10.சேமியா பழப்பாயாசம்.:-

தேவையானவை:- சேமியா – பாதி பாக்கெட். பால் – 1 லிட்டர். பழங்கள் –ஒரு கப் ( கட்டம் கட்டமாக அரிந்த ஆப்பிள், பைனாப்பிள், ஸ்ட்ராபெர்ரி , டூட்டி ஃப்ரூட்டி, மாதுளை, விதையில்லா கறுப்பு , பச்சை திராட்சைகள் ). சர்க்கரை – அரை கப், ரோஸ் எசன்ஸ் – சில சொட்டுகள், நெய் – 2 டீஸ்பூன், கிஸ்மிஸ், முந்திரி தலா – 10.  

செய்முறை:- பாதிப் பாலைக் கொதிக்கவைத்து சேமியாவைச் சேர்த்துக் கிளறவும். வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கரைந்ததும் இறக்கி ஆறவிடவும். மீதிப்பாலைக் காய்ச்சி ஆறவிடவும். பழக் கலவையில் சிறிது சர்க்கரை தூவிப் புரட்டி வைக்கவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸைப் பொரித்துப் போடவும். சேமியாவில் ஆறிய பால், பழவகைகள், முந்திரி கிஸ்மிஸ், ரோஸ் எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கிக் குளிர்வித்து நிவேதிக்கவும்.

ிஸ்கி:- இந்தெசிப்பீஸ் & கோலங்கள் டிசம்பர் 15, 2016 குமம் பக்ி ஸ்ில் வெளியானை. 

ிஸ்கி 2.:-  ிள்ளையார் மல் அனுமன் வை சிறப்பு பிரெசிப்பீஸைப் பாராட்டிய ிருவான்மியூர் ாசி ிருமி ஜி லெட்சுமி வாசேவன் அவர்குக்கு நன்றி. ! 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...