எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

வியாழன், 19 ஜனவரி, 2017

ஓட்ஸ் ஹனி பர்ஃபி. OATS HONEY BURFI.

ஓட்ஸ் ஹனி பர்ஃபி.

தேவையானவை :-
முழு ஓட்ஸ் – 4 கப், முந்திரி பாதாம் வேர்க்கடலை – தலா 10 ( வறுத்துத் தோல் நீக்கியது.) நெய் – 1 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை, ப்ரவுன் சுகர்/நாட்டுச் சர்க்கரை – 3 கப். தேன் – 2 டேபிள்ஸ்பூன்.


செய்முறை:-
ஓட்ஸை வெறும் கடாயில் வறுத்து ஆறவிடவும். முந்திரி பாதாம் வேர்க்கடலையை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி ஓட்ஸையும் ஒரு சுற்று சுற்றி இறக்கவும். ப்ரவுன் சுகரில் சிறிது தண்ணீர் ஊற்றி முற்றிய பாகுவைத்து அதில் உப்பையும் நெய்யையும் சேர்த்துக் கலக்கி தேன் சேர்க்கவும். அதில்  ஓட்ஸ் & நட்ஸ் கலவையைப் போட்டுக் கிளறவும். ஒரு தட்டில் அரிசி மாவைத் தூவி ஓட்ஸ் & நட்ஸ் கலவை ஒட்டாமல் வந்ததும் கொட்டி சமமாகத் தட்டி மீதி அரிசி மாவைத் தூவித் துண்டுகள் போட்டு ஆறியதும் எடுத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கவும்.

ஓட்ஸ் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமாவைத் தடுக்கின்றது. குடலுக்கு ஒவ்வாத க்ளூட்டீன் என்பது ஓட்ஸில் இல்லை. இதில் இருக்கும் பீட்டா குளுக்கன் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்குது. உடல் எடையை சமச்சீராக வைத்திருக்க உதவுது. கெட்ட கொழுப்பைக் குறைத்து ரத்த ஓட்டத்தைச் சீராக்குது.

ஓட்ஸில் கார்போஹைட்ரேட், ப்ரோட்டீன் அதிக அளவில் இருக்கு. செரிமானத்துக்கு உதவும் நார்ச்சத்தும் இருக்கு. ஃபோலேட் அதிக அளவிலும் தையமின் நியசின் பாத்தோஜெனிக் ஆசிட் குறைந்த அளவிலும் இடம் பெற்றுள்ளன. ஒமேகா 3 ஃபாட்டி ஆசிட் 173 மிகிராமும், ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட்3781 மிகிராமும் இருக்கின்றன.

தேன் தொண்டைக் கரகரப்பை நீக்குது. இருமலைப் போக்கும். நல்ல அமைதியான தூக்கம் கொடுக்கும். அதிக கலோரீஸ் கொடுக்குது. கார்போஹைட்ரேட், ப்ரோட்டீன், கொழுப்புச்சத்து எல்லாம் அதிக அளவில் இருக்கு. விட்டமின் சி, ஃபோலேட், கோலைன், பீட்டைன் ஆகியன அதிக அளவில் இருக்கின்றன.

கால்ஷியம், இரும்பு, மக்னீசியம், பாஸ்பரஸ் , பொட்டாசியம், சோடியம் , துத்தநாகம், காப்பர், மாங்கனீஸ், செலினியம் , ஃப்ளூரைட் ஆகியனவும் அதிக அளவில் இருக்கின்றன. இனிப்புச் சத்து அதிக அளவில் இருக்கு.

தேன் ஓட்ஸ் இரண்டிலும் நீர்மச் சத்தும் சாம்பல் சத்தும் சிறிதளவு இருக்கு. இரண்டும் சேர்த்து சாப்பிடும்போது குழந்தைகளுக்கு அது ஒரு முழுமையான காலை உணவாகுது.

டிஸ்கி:- வெஜிடபிள் ஆம்லெட் ரெசிப்பியைப் பாராட்டிய வாசகர் விளமல் தியாகராஜன் அவர்களுக்கு நன்றி. 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...