எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 22 பிப்ரவரி, 2025

சர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ்



தேவையானவை :- சர்க்கரை வள்ளிக்கிழங்கு -  4, சின்ன வெங்காயம் - 6, பச்சை மிளகாய் - 1, உப்பு - கால் டீஸ்பூன்,  தாளிக்க - எண்ணெய் - 2 டீஸ்பூன். கடுகு - அரை டீஸ்பூன், உளுந்து - ஒரு டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை :- சர்க்கரை வள்ளிக்கிழங்குகளை வேகவைத்துத் தோலுரிக்கவும். புட்டுபோல உதிர்த்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம் பச்சை மிளகாயைப் பொடிப்பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் பச்சைமிளகாய், வெங்காயம் கருவேப்பிலையைத் தாளிக்கவும். ஓரிரு நிமிடங்கள் வதக்கியபின் உதிர்த்த சர்க்கரைவள்ளிக்கிழங்கையும் உப்பையும் சேர்க்கவும்.  நன்கு கலக்கி கிளறி இறக்கவும்.

புதன், 19 பிப்ரவரி, 2025

இலை அடை

இலை அடை



தேவையானவை :- இட்லி அரிசி - 2 ஆழாக்கு, துருவிய தேங்காய் - 1 கப், தூள் வெல்லம் - 1/2 கப், உப்பு - 1 சிட்டிகை, வாழை இலை – 2

 

செய்முறை :- அரிசியை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

நன்கு மசிய அரைக்கவும். உப்பு சேர்க்கவும். ஒரு காட்டன் துணியில் மாவைக் கொட்டிவைத்தால் அதிகப்படியான தண்ணீரை உறிஞ்சி விடும். தேங்காயையும் வெல்லத்தையும் கலக்கவும். இலையை சம துண்டுகளாக வெட்டவும். இலையில் மாவை மெல்லிய தகடாக தட்டவும். அதில் தேங்காய் வெல்லக் கலவையை பரப்பவும். ரெண்டாக மடித்து ஒட்டவும். ஆவியில் 15 நிமிடங்கள் வேகவைக்கவும். வாழை இலைகளை எடுத்துவிட்டுப் பரிமாறவும். ப்ளைன் இலை அடைக்கு வெறும் தேங்காய் மட்டும் தூவி செய்யவும்.

திங்கள், 17 பிப்ரவரி, 2025

ஆப்பம்

ஆப்பம்



தேவையானவை :- பச்சரிசி - 1 கப், புழுங்கல் அரிசி ( இட்லி அரிசி) - 1 கப், உளுந்து - 1/2 கப், வெந்தயம் - 2 டீஸ்பூன், உப்பு - 1/2 டீஸ்பூன்

 

செய்முறை :- அரிசிகள்., உளுந்து., வெந்தயத்தை கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். மைய அரைத்து உப்பு போட்டுக் கரைத்து வைக்கவும். 10 மணி நேரம் புளிக்க விடவும். ஆப்பக்கல்லை எண்ணைத் துணியால் துடைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றி கல்லை அடுப்பிலிருந்து எடுத்து அப்படியே ஸ்லாத்தவும். அல்லது சுற்றவும். மாவு எல்லாப் பக்கங்களிலும் சரியாக பரவும்.. அடுப்பில் வைத்து மூடி போட்டு ஒரு நிமிடம் வேக விடவும். மூடியை திறந்து ஆப்பத்தை எடுத்து தேங்காய்ப் பால் ஊற்றிப் பரிமாறவும். ஒரு முழுத்தேங்காயைத் திருகி மிக்சியில் அரைத்து 2 கப் தண்ணீர் ஊற்றிப் பாலெடுத்து வடிகட்டி ., 2 டேபிள்ஸ்பூன் சீனியும் ., பொடித்த ஏலக்காயும் போடவும்.

புதன், 12 பிப்ரவரி, 2025

பால் அல்வா

பால் அல்வா



தேவையானவை:- பால் – 2 லிட்டர், சீனி – ஒரு கப், பால் பவுடர் – 200 கி, எலுமிச்சை சாறு – சில துளிகள், நெய் – 1 கப், முந்திரி – 12.

செய்முறை:- ஒரு லிட்டர் பாலைக் காய்ச்சிக் கொதிக்கவிட்டு எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். பால் பனீராகத் திரிந்ததும் ஒரு துணியில் வடிகட்டி எடுத்து உதிர்த்துக் கொள்ளவும். இன்னொரு லிட்டர் பாலைக் காய்ச்சி அது சுண்டும்போது சீனியைச் சேர்த்து உதிர்த்த பனீரையும் சேர்த்துக் கிளறவும். முந்திரியை ஒடித்து நெய்யில் பொரித்து வைக்கவும். பால் சுண்டி வரும்போது பால் பவுடரைச் சலித்துச் சேர்த்து நெய்யைச் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு சுருண்டதும் இறக்கி முந்திரியால் அலங்கரிக்கவும்.

வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

பால் கொழுக்கட்டை

பால் கொழுக்கட்டை



தேவையானவை :- இட்லி அரிசி – 2 கப், தேங்காய் – 1, சீனி – 300 கி, ஏலக்காய் – 4.

செய்முறை:- இட்லி அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து நைஸாக அரைக்கவும். தண்ணீர் அதிகம் இருந்தால் இஞ்சுவதற்காக அதை ஒரு சுத்தமான வெண்துணியில் கட்டி வைக்கவும். தேங்காயை அரைத்து கெட்டிப்பால் எடுக்கவும். அதன் பின் இருமுறை ஒரு கப் தண்ணீர் விட்டுப் பால் எடுத்து வைக்கவும். மூன்றாம் பாலில் சீனியைப் போட்டுக் கரைந்ததும் வடிகட்டி வைக்கவும். இரண்டாம் பாலைப் பாத்திரத்தில் ஊற்றிக் கொதிவரும்போது அரைத்த மாவை சீடைக்காய் அளவில் கொழுக்கட்டைகளாகத் தட்டிப் போடவும். பாதி வேகும்போது சீனி சேர்த்த தண்ணீரையும் ஊற்றிக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்துக் கொழுக்கட்டைகள் வெந்ததும் முதல் பாலை ஊற்றி ஏலப்பொடி போட்டு இறக்கி நிவேதிக்கவும்.

புதன், 5 பிப்ரவரி, 2025

தேன்குழல்

தேன்குழல்



தேவையானவை :- பச்சரிசி - 6 கப், வெள்ளை உளுந்தம் பருப்பு - 2 கப், உப்பு – 2 1/2 டீஸ்பூன், தண்ணீர் - 4 கப், எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு

செய்முறை:- பச்சரிசியைக் கழுவி நிழற்காய்ச்சலாகப் போட்டு மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும். உளுந்தம் பருப்பை வெறும் வாணலியில் வெதுப்பி மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும். இரண்டையும் கலந்து உப்பு சேர்த்துத் தேவையான நீர் ஊற்றிப் பிசையவும். கொஞ்சம் காய்ந்த எண்ணெயையும் ஊற்றிப் பிசைந்து நீள் உருண்டைகளாக உருட்டி ஒரு ஈரத் துணி கொண்டு மூடவும். எண்ணெயைக் காயவைத்து மாவு உருண்டைகளைத் தேன்குழல் அச்சில் போட்டுக் காயும் எண்ணெயில் பிழிந்து வெண்ணிறமாக எடுக்கவும். பக்குவம் சரியாக இருந்தால் வெண்ணிறமாகவே வரும்.
Related Posts Plugin for WordPress, Blogger...