தேன்குழல்
தேவையானவை :- பச்சரிசி - 6 கப், வெள்ளை உளுந்தம் பருப்பு - 2 கப், உப்பு – 2 1/2 டீஸ்பூன், தண்ணீர் - 4 கப், எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு
செய்முறை:- பச்சரிசியைக் கழுவி நிழற்காய்ச்சலாகப் போட்டு மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும். உளுந்தம் பருப்பை வெறும் வாணலியில் வெதுப்பி மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும். இரண்டையும் கலந்து உப்பு சேர்த்துத் தேவையான நீர் ஊற்றிப் பிசையவும். கொஞ்சம் காய்ந்த எண்ணெயையும் ஊற்றிப் பிசைந்து நீள் உருண்டைகளாக உருட்டி ஒரு ஈரத் துணி கொண்டு மூடவும். எண்ணெயைக் காயவைத்து மாவு உருண்டைகளைத் தேன்குழல் அச்சில் போட்டுக் காயும் எண்ணெயில் பிழிந்து வெண்ணிறமாக எடுக்கவும். பக்குவம் சரியாக இருந்தால் வெண்ணிறமாகவே வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக