எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 15 ஜூலை, 2021

8.பீட்ரூட் பிரியாணி

8.பீட்ரூட் பிரியாணி


தேவையானவை:- பீட்ரூட் பெரிது 1, பொன்னி புழுங்கல் அரிசி – 1 கப், பாசிப்பருப்பு – கால் கப், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, இஞ்சி பூண்டு விழுது- 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள், மல்லித்தூள் – அரை டீஸ்பூன் தலா, மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, கொத்துமல்லித்தழை – 2 டீஸ்பூன், பட்டை கிராம்பு, ஏலக்காய் – தலா 2. கல்பாசிப்பூ, பிரிஞ்சி இலை – தலா 1,எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:- பீட்ரூட்டைத் தோல்சீவித் திருகி வைக்கவும். பொன்னி புழுங்கல் அரிசியைக் களைந்து நீரை வடித்து வைக்கவும். பாசிப்பருப்பைக் கழுவி கால் கப் நீரில் ஊறவைக்கவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்துப் பட்டை கிராம்பு, ஏலக்காய், கல்பாசிப்பூ, பிரிஞ்சி இலை போட்டுத் தாளிக்கவும். இதில் பொடியாக அரிந்த வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். எண்ணெய் பிரியும்போது இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்க்கவும். அதிலேயே மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மல்லித்தூள், திருகிய பீட்ரூட், தக்காளி கொத்துமல்லித்தழை சேர்த்து நன்கு கிளறி பாசிப்பருப்பை நீருடன் சேர்த்து நன்கு கலக்கி மூடி போட்டு வேகவிடவும். ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து வெந்ததும் புழுங்கல் அரிசியைச் சேர்த்து உப்புப் போட்டு இரண்டு கப் நீரூற்றி நன்கு கலக்கி குக்கரில் ஒரு விசில் வரும்வரை வைக்கவும். ஆறியதும் இறக்கி சில்லி சிக்கன், மயோனிஸுடன் பரிமாறவும். 

 

ஞாயிறு, 11 ஜூலை, 2021

7.முந்திரி பிரியாணி

7.முந்திரி பிரியாணி


தேவையானவை:- முந்திரி – 100 கி , கிஸ்மிஸ் – ஒரு டேபிள் ஸ்பூன், பாசுமதி அரிசி – 2 கப், தேங்காய்ப்பால் – 4 கப், பெரிய வெங்காயம் – 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன், புதினா மல்லித்தழை – ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் – 2, நெய் – 1 டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ – 2 சிட்டிகை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, உப்பு – ஒரு டீஸ்பூன், சீனி – கால் டீஸ்பூன்.

செய்முறை:- பாசுமதி அரிசியைக் களைந்து நீரை இறுத்து வைக்கவும். பானில் நெய்யைக் காயவைத்து பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து முந்திரி கிஸ்மிஸைப் போடவும். முந்திரி லேசாக வதங்கியதும் ( சிவக்க வேண்டாம்) பெரிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், புதினா கொத்துமல்லித்தழை, உப்பு சேர்க்கவும். லேசாக நெய் பிரிந்ததும் அரிசியைச் சேர்த்து வறுத்துக் குங்குமப்பூவைப் போட்டுத் தேங்காய்ப்பாலை ஊற்றவும். சிம்மில் மூடி போட்டுக் கிளறி கடைசியாக தம்மில் வைத்து இறக்கவும். ரோஹன் ஜோஷ், சிக்கன் குருமாவுடன் பரிமாறவும்.

 

வியாழன், 8 ஜூலை, 2021

6.புதினா மல்லி பிரியாணி

6.புதினா மல்லி பிரியாணி


தேவையானவை:- பச்சரிசி – 2 கப், புதினா – 1 கட்டு, கொத்துமல்லி – அரைக்கட்டு, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, பச்சைமிளகாய் – 4, இஞ்சி – 2 இஞ்ச் துண்டு, பூண்டு – 4 பல், தேங்காய் – அரை மூடி, சோம்பு, சீரகம், மிளகு, கசகசா – தலா அரை டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, பிரிஞ்சி இலை, கல்பாசிப்பூ – சிறிது, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – 1 டீஸ்பூன்.

செய்முறை:- பச்சரிசியைக் களைந்து ஊறவைக்கவும். பெரிய வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். புதினா கொத்துமல்லியை சுத்தம் செய்து 1, பட்டை, 1, கிராம்பு, 1 ஏலக்காய், மிளகு, சோம்பு, சீரகம், இஞ்சி, பூண்டு, தேங்காய், கசகசாவோடு அரைத்து நான்கு கப் தண்ணீர் ஊற்றி வடிகட்டி அந்த நீரை மட்டும் எடுத்துக் கொள்ளவும். ப்ரஷர் பானில் எண்ணெயைக் காயவைத்து மிச்ச பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசிப்பூ, பிரிஞ்சி இலை போட்டுத் தாளித்துப் பெரிய வெங்காயம், பெரிய வெங்காயம் தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.. இதில் அரிசியை வடித்துப் போட்டு நன்கு கிளறவும். உப்பைச் சேர்த்து இருநிமிடங்கள் கிளறியதும் அரைத்து வடித்து வைத்திருக்கும் புதினா கொத்தமல்லித் தண்ணீரை ஊற்றி நன்கு கலக்கவும். ப்ரஷர் பானை மூடி ஒரு விசில் வைத்து இறக்கவும். சூடாகத் தக்காளி குருமா, முட்டை மசாலாவோடு பரிமாறவும்.

 

ஞாயிறு, 4 ஜூலை, 2021

5.முயல் பிரியாணி

5.முயல் பிரியாணி


தேவையானவை:- சீரகச் சம்பா அரிசி – கால்கிலோ, முயல்கறி – கால் கிலோ, பெரிய வெங்காயம் – 2 தக்காளி – 2, இஞ்சிபூண்டு விழுது – 2 டீஸ்பூன், பட்டை, பிரிஞ்சி இலை, கல்பாசிப்பூ, அன்னாசிப்பூ, மராட்டி மொக்கு – தலா 1, கிராம்பு, ஏலக்காய் – தலா 4,  பிரியாணி மசாலா – 1 டேபிள் ஸ்பூன் , மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, மிளகாய்த்தூள், மல்லித்தூள் – தலா ஒரு டீஸ்பூன், சோம்புத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் – தலா அரை டீஸ்பூன், கொத்துமல்லி புதினாத்தழைகள் – 2 டேபிள் ஸ்பூன், பசுமாட்டுத்தயிர் – 1 கப், கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – 1 டீஸ்பூன்.

செய்முறை:- சீரகச் சம்பா அரிசியைக் கழுவி இரண்டரை கப் நீரில் ஒருமணி நேரம் ஊறவைக்கவும். முயல்கறியை சுத்தம் செய்து துண்டுகள் போடவும். பெரிய வெங்காயத்தையும் தக்காளியையும் நீளமாக நறுக்கவும். அடி கனமான பாத்திரத்தில் கடலை எண்ணெயை ஊற்றிப் பட்டை கிராம்பு ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, கல்பாசிப்பூ, மராட்டி மொக்கு போட்டுத் தாளிக்கவும். இதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். பச்சை வாடை போனபின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் உப்பு, மஞ்சள்தூள் போட்டு வறுக்கவும். அது சிவந்ததும் பிரியாணி மசாலா, மிளகாய்த்தூள், மல்லித்தூள், , சோம்புத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், தயிர், புதினா கொத்துமல்லித்தழை சேர்க்கவும். எண்ணெய் பிரியும்போது முயல்கறியைச் சேர்த்து நன்கு கிளறவும். சிறிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டுப் பத்து நிமிடம் நன்கு வேகவிடவும். முயல்கறி வெந்து எண்ணெய் பிரிந்து வரும்போது சீரகச் சம்பா அரிசியை நீருடன் சேர்த்துக் கலக்கவும். முக்கால் பதம் வெந்ததும் தம் போடவேண்டும். கரி இருந்தால் சாம்பிராணிக்கரண்டியில் பற்றவைத்துப் போடலாம். கொஞ்சம் மைதாவை எடுத்து நீர் விட்டுப் பிசைந்து பிரியாணிப்பாத்திரத்தின் ஓரத்தில் வைத்து மூடியை மூடி டைட்டாக ஒட்டி வைக்கவும். இதன்மேல் அந்தக் கங்குகளை வைத்து அடுப்பை சிம்மில் 10 நிமிடம் வைத்து இறக்கவும். இல்லாவிட்டால் மைதாவால் மூடி ஒரு தோசைக்கல்லில் பிரியாணிப்பாத்திரத்தை வைத்து அடுப்பை பத்துநிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும். இன்னும் பத்து நிமிடங்கள் கழித்துத் திறந்து வெங்காய்த்தயிர்ப் பச்சடியுடன் பரிமாறவும்.

 

வியாழன், 1 ஜூலை, 2021

4.தினை காளான் பிரியாணி

4.தினை காளான் பிரியாணி


தேவையானவை:- தினை – 2 கப், சிப்பிக் காளான் – 1 பாக்கெட், பெரிய வெங்காயம் – 2, இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன், பச்சைமிளகாய் – 4, தக்காளி – 2, மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, மிளகாய், மல்லித்தூள் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 4, தேங்காய் திருகியது – 2 டீஸ்பூன், சோம்பு, சீரகம், மிளகு – தலா அரை டீஸ்பூன், உப்பு – 1 டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா -2, கொத்துமல்லி, புதினாத்தழை – 2 டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் .

செய்முறை:- காளானை சுத்தம் செய்து இரண்டாக வெட்டி வெந்நீரில் போட்டு எடுக்கவும். தினையைக் கழுவி ஊறவைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காயைத் தாளிக்கவும். நீளமாக அரிந்த வெங்காயத்தைப் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி பூண்டு சேர்த்து ப்ரவுனாக ஆனதும் மிளகாய்த்தூள் மல்லித்தூள், உப்பு, மஞ்சள் பொடி காளான் சேர்த்து நன்கு திறக்கவும். எண்ணெய் பிரியும்போது தினை, தக்காளி, கொத்துமல்லி, கருவேப்பிலை போடவும். தேங்காய், சோம்பு சீரகம் மிளகை நன்கு அரைத்து நான்கு கப் தண்ணீரில் கரைத்து தினையில் ஊற்றவும். நன்கு கலக்கிவிட்டு குக்கரை மூடி ஒரு விசில் வைத்து இறக்கவும் ஆறியதும் திறந்து பைனாப்பிள் தயிர்ப்பச்சடியோடு பரிமாறவும்.

 
Related Posts Plugin for WordPress, Blogger...