எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

ஞாயிறு, 4 ஜூலை, 2021

5.முயல் பிரியாணி

5.முயல் பிரியாணி


தேவையானவை:- சீரகச் சம்பா அரிசி – கால்கிலோ, முயல்கறி – கால் கிலோ, பெரிய வெங்காயம் – 2 தக்காளி – 2, இஞ்சிபூண்டு விழுது – 2 டீஸ்பூன், பட்டை, பிரிஞ்சி இலை, கல்பாசிப்பூ, அன்னாசிப்பூ, மராட்டி மொக்கு – தலா 1, கிராம்பு, ஏலக்காய் – தலா 4,  பிரியாணி மசாலா – 1 டேபிள் ஸ்பூன் , மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, மிளகாய்த்தூள், மல்லித்தூள் – தலா ஒரு டீஸ்பூன், சோம்புத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் – தலா அரை டீஸ்பூன், கொத்துமல்லி புதினாத்தழைகள் – 2 டேபிள் ஸ்பூன், பசுமாட்டுத்தயிர் – 1 கப், கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – 1 டீஸ்பூன்.

செய்முறை:- சீரகச் சம்பா அரிசியைக் கழுவி இரண்டரை கப் நீரில் ஒருமணி நேரம் ஊறவைக்கவும். முயல்கறியை சுத்தம் செய்து துண்டுகள் போடவும். பெரிய வெங்காயத்தையும் தக்காளியையும் நீளமாக நறுக்கவும். அடி கனமான பாத்திரத்தில் கடலை எண்ணெயை ஊற்றிப் பட்டை கிராம்பு ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, கல்பாசிப்பூ, மராட்டி மொக்கு போட்டுத் தாளிக்கவும். இதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். பச்சை வாடை போனபின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் உப்பு, மஞ்சள்தூள் போட்டு வறுக்கவும். அது சிவந்ததும் பிரியாணி மசாலா, மிளகாய்த்தூள், மல்லித்தூள், , சோம்புத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், தயிர், புதினா கொத்துமல்லித்தழை சேர்க்கவும். எண்ணெய் பிரியும்போது முயல்கறியைச் சேர்த்து நன்கு கிளறவும். சிறிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டுப் பத்து நிமிடம் நன்கு வேகவிடவும். முயல்கறி வெந்து எண்ணெய் பிரிந்து வரும்போது சீரகச் சம்பா அரிசியை நீருடன் சேர்த்துக் கலக்கவும். முக்கால் பதம் வெந்ததும் தம் போடவேண்டும். கரி இருந்தால் சாம்பிராணிக்கரண்டியில் பற்றவைத்துப் போடலாம். கொஞ்சம் மைதாவை எடுத்து நீர் விட்டுப் பிசைந்து பிரியாணிப்பாத்திரத்தின் ஓரத்தில் வைத்து மூடியை மூடி டைட்டாக ஒட்டி வைக்கவும். இதன்மேல் அந்தக் கங்குகளை வைத்து அடுப்பை சிம்மில் 10 நிமிடம் வைத்து இறக்கவும். இல்லாவிட்டால் மைதாவால் மூடி ஒரு தோசைக்கல்லில் பிரியாணிப்பாத்திரத்தை வைத்து அடுப்பை பத்துநிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும். இன்னும் பத்து நிமிடங்கள் கழித்துத் திறந்து வெங்காய்த்தயிர்ப் பச்சடியுடன் பரிமாறவும்.

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...