வரகரிசி வெல்லக்
கொழுக்கட்டை
தேவையானவை:-
வரகரிசி – 2 கப், பாசிப்பருப்பு – 1 கைப்பிடி, வெல்லம் – முக்கால் கப், தேங்காய்த்துருவல்
– 1 டேபிள் ஸ்பூன், ஏலத்தூள் – 1 சிட்டிகை. உப்பு - 1 சிட்டிகை, நெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை:-
வரகரிசியையும் பாசிப்பருப்பையும் லேசாக வறுத்துக் களைந்து காயவைத்து கொழுக்கட்டை மாவு
பதத்தில் பொடித்து வைக்கவும். வெல்லத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றிப் பாகுவைத்து வடிகட்டி
மாவில் சேர்த்து தேங்காய்த்துருவல் போடவும். உப்பும், ஏலத்தூளும் போட்டு சிறிது நேரம்
மூடிவைக்கவும். ஆறியதும் நெய் சேர்த்து நன்கு பிசைந்து இட்லிப் பாத்திரத்தில் ஆவியில்
20 நிமிடம் வேகவைத்து நிவேதிக்கவும்.
பச்சைப் பயறு
அடை:-
தேவையானவை:-
பச்சரிசி – 2 கப், பாசிப்பயறு – 1 கப், பச்சை மிளகாய்- 2, இஞ்சி – 1 இன்ச் துண்டு,
கொத்துமல்லி – 1 கைப்பிடி, தேங்காய்த் துருவல், காரட் துருவல் – தலா 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு- அரை டீஸ்பூன், எண்ணெய்- 50 மில்லிகிராம்.
செய்முறை:-
பச்சரிசியையும் பாசிப்பயறையும் தனித்தனியாக ஊறவைக்கவும். ( பாசிப்பயறை முளை கட்டியும்
உபயோகிக்கலாம். ). பச்சை மிளகாய், உப்பு, இஞ்சி, கொத்துமல்லித் தழை சேர்த்து கொரகொரப்பாக
அரைக்கவும். இதில் தேங்காய், காரட் துருவல் சேர்த்து சிறிது நேரம் வைக்கவும். தோசைக்கல்லில்
அடையாகத் தட்டி எண்ணெய் விட்டுத் திருப்பிப் போட்டு மொறுமொறுப்பானதும் எடுத்து நிவேதிக்கவும்.