எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

கருப்பட்டிப் பாயாசம்

கருப்பட்டிப் பாயாசம்


தேவையானவை :- பச்சரிசி – ஒரு கைப்பிடி, தேங்காய்த்துருவல் – ஒரு கைப்பிடி கருப்பட்டி – ஒரு கட்டி, நெய் – அரை டீஸ்பூன், ஏலப்பொடி – கால் டீஸ்பூன், முந்திரி கிஸ்மிஸ் – தலா 10

செய்முறை:- பச்சரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து தேங்காய்த்துருவலோடு சேர்த்து நைஸாக அரைக்கவும். இதில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்துப் பானில் ஊற்றிக் காய்ச்சவும். வெந்து கண்ணாடி போல் ஒட்டாத பதம் வந்ததும் கருப்பட்டியை நைத்து சிறிது வெந்நீரில் கரைத்து வடிகட்டி இதில் ஊற்றவும். கொதி வந்ததும் இறக்கி வைத்து நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் பொரித்துப் போட்டு ஏலப்பொடி தூவவும்.

புதன், 29 ஜூலை, 2026

ஓலைக் கொழுக்கட்டை

ஓலைக் கொழுக்கட்டை


தேவையானவை :- பனை ஓலைக்குருத்து – ஒரு அடி நீளமும் மூன்று அங்குல அகலமும் உள்ளது =10. பச்சரிசிமாவு – 2 கப், வேகவைத்த காராமணி- 1 கைப்பிடி , கருப்பட்டி – முக்கால் கப், தேங்காய்த்துருவல் – ஒரு மூடி. உப்பு – 1 சிட்டிகை. ஏலப்பொடி – 1 சிட்டிகை.

செய்முறை:- பனைஓலைக் குருத்துகளை நீரில் நனைத்து வைக்கவும். பச்சரிசி மாவில் உப்பு, ஏலப்பொடி, வேகவைத்த காராமணி , தேங்காய்த்துருவல் போட்டு நன்கு கலந்து கருப்பட்டியை நீரில் இளம்பாகுவைத்து கெட்டியாக ஊற்றி மாவை நன்கு பிசையவும். ஒரு ஓலையை எடுத்து அதில் நீளவாக்கில் கொழுக்கட்டை மாவை வைத்து இன்னொரு ஓலையால் மூடவும். இதேபோல் மீதி மாவையும் செய்து இட்லிப் பாத்திரத்தில் 20 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்

ஞாயிறு, 26 ஜூலை, 2026

சுக்கு மல்லிக் கருப்பட்டிக் காப்பி

சுக்கு மல்லிக் கருப்பட்டிக் காப்பி


தேவையானவை:- சுக்கு – 1 இஞ்ச் துண்டு, மல்லி – 1 டீஸ்பூன், ஏலக்காய் – 2, மிளகு – 1 டீஸ்பூன், கருப்பட்டி – 50 கிராம் துருவியது. தண்ணீர் – 2 கப்.

செய்முறை:- சின்ன மிக்ஸி ஜாரில் நைத்த சுக்கு மல்லி, ஏலக்காய், மிளகு போட்டு ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். இரண்டு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் இந்தப் பொடியைப் போடவும். நன்கு கொதிக்கும்போது துருவிய கருப்பட்டியைச் சேர்த்துக் கரைந்ததும் வடிகட்டி அருந்தவும்.

வியாழன், 23 ஜூலை, 2026

அஞ்சுமாக் கொழுக்கட்டை

அஞ்சுமாக் கொழுக்கட்டை


தேவையானவை :- பச்சரிசி மாவு – கால் கப், புழுங்கரிசி மாவு – கால் கப், சிவப்பரிசி மாவு – கால் கப் , கவுனரிசி மாவு – கால் கப் , கோதுமை மாவு – கால் கப் , துருவிய தேங்காய் – அரை கப், வெல்லம்+ பனங் கருப்பட்டி – 150 கிராம். ஏலப்பொடி – 1 சிட்டிகை, உப்பு – 1 சிட்டிகை, வெந்நீர் – ஒண்ணேகால் கப். வறுத்த எள்ளு – அரை டீஸ்பூன்.

செய்முறை :- ஒவ்வொரு மாவையும் தனித்தனியாக வெறும் பானில் மணல்போல வறுத்து ஒரு பௌலில் கொட்டவும். வெல்லத்தையும் கருப்பட்டியையும் ஒரு கப் தண்ணீரில் போட்டு இளம்பாகு வைத்து கரைத்து வடிகட்டவும். தேங்காய்த் துருவல் உப்பு ஏலப்பொடி எள் போட்டு மாவில் நன்கு கலந்து வெல்லக்கருப்பட்டிப் பாகு ஊற்றி நன்கு கிளறவும். மாவை நன்கு பிசைந்து பிடி கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் 20 நிமிடம் வேகவைத்து இறக்கவும்.

திங்கள், 20 ஜூலை, 2026

பனங்கற்கண்டுப் பால்

பனங்கற்கண்டுப் பால்


தேவையானவை:- பால் - ஒரு லிட்டர். பனங்கற்கண்டு - 100 கி. 

செய்முறை:- பாலைக் காய்ச்சிப் பொங்கும் போது அடக்கி வைத்துப் பனங்கல்கண்டைப் போடவும். கரண்டியால் கிண்டி நன்கு கரைந்ததும் வடிகட்டிக் கொடுக்கவும். இது பத்துப் பேருக்குக் கொடுக்கப் போதுமானது. தொண்டைக் கட்டு நீங்க இதை அருந்தக் கொடுப்பது வழக்கம். பால் அதிக திக்காக இருந்தால் சரிக்குச் சரி நீர் சேர்த்துக் கொள்ளலாம்.

வெள்ளி, 17 ஜூலை, 2026

பாற்சோறு

பாற்சோறு


தேவையானவை :- பச்சரிசி -  1 கப், வெல்லம்+கருப்பட்டி - 2 கப், தேங்காய்  ஒரு மூடி - பல்லு பல்லாக நறுக்கவும்., தண்ணீர் - 4 கப், நெய் - 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:- அரிசியை களைந்து வைக்கவும். வெல்லம்+ கருப்பட்டியைத் தண்ணீரில் போட்டு சூடாக்கி நன்கு கரைத்து வடிகட்டவும். திரும்ப  அதே அடிகனமான பாத்திரத்தில் வெல்லம் கருப்பட்டிப் பாகை ஊற்றி  கொதிவந்ததும் அரிசியை போடவும். கிளறிக்கொண்டே இருக்கவும். முக்கால் பதம் வெந்ததும்  தேங்காய்ப் பல்லுகளைச் சேர்க்கவும். இறுகி வெந்து ஒட்டாமல் வந்தவுடன் நெய்யைச் சேர்த்து இறக்கவும். இது 2 நாளைக்கு கெடாது. சூடாகவோ , குளிர்ச்சியாகவோ பரிமாறவும்.

செவ்வாய், 14 ஜூலை, 2026

திரட்டுப்பால்

திரட்டுப்பால்


தேவையானவை:- பால் – 2 லிட்டர், கருப்பட்டி – 200 கி, வெல்லம் – 1 துண்டு., எலுமிச்சைச் சாறு – சில சொட்டு.

செய்முறை:- பாலை அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். நன்கு பொங்கி வரும்போது எலுமிச்சை சாறு சில துளிகள் பிழியவும். அதிகம் வேண்டாம் புளிக்கும். இல்லாவிட்டால் தயிர் ஒரு ஸ்பூன் விடவும். நன்கு திரைந்து விடும்.  வெல்லம் கருப்பட்டியை நைத்து அந்தத் தண்ணீரை சிறிது வடித்து அதில் போட்டுக் கரைந்ததும் வடிகட்டி திரும்பத் திரைந்த பாலில் ஊற்றவும். தீயை மிதமாக வைத்து 20 நிமிடங்களில் ஓரளவு சுண்டியதும் இறக்கவும். அதிகம் கரண்டி போட்டுக்கிளற வேண்டாம். லேசாகப் பாகுடன் இருந்தால் சுவையாக இருக்கும்.

சனி, 11 ஜூலை, 2026

குமுதம் சிநேகிதியில் பனை சார்ந்த உணவுகள்

பனைவெல்லம்,நுங்கு,பனங்கிழங்கு உணவுகள்


தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் சிறப்பிடம் பெற்றவை பனை சார்ந்த பொருட்கள். வேரில் இருந்து மடல் வரை பயன் தரும் இதைக் கற்பகத் தரு எனக் கூறலாம்.



 பனையிலிருந்து பெறப்படும் பனம்பழம், பனங்கிழங்கு, நுங்கு, பதநீர், அதைக் காய்ச்சிப் பெறப்படும் கருப்பட்டி, பனைவெல்லம், பனங்கற்கண்டு ஆகியன கண் பார்வைக்கும், இரத்தவிருத்திக்கும், குரல் வளத்துக்கும் உதவுகின்றன. வயிற்றுப் புண், வயிற்றெரிச்சல் ஆகியவற்றை நீக்குகின்றன. எலும்புகள் மட்டுமல்ல பெண்களின் கருப்பையும் வலுவாகிறது. மொத்தத்தில் பனை உணவுகளை அடிக்கடி செய்து உண்பது ஆரோக்கியத்துக்கு நல்லது.

 


1.திரட்டுப்பால்

2.கும்மாயம்

3.பாற்சோறு

4.கருப்பட்டிக் கொழுக்கட்டை

5.சிவப்பரிசி பனைவெல்லப் பொங்கல்

6.கருப்பட்டி ஆப்பம். தேங்காய்ப் பால்

7.கருப்பட்டிக் குழிப்பணியாரம்

8.அஞ்சுமாக் கொழுக்கட்டை

9.உளுந்தங்களி

10.சுக்கு மல்லிக் கருப்பட்டிக் காப்பி

11.ஓலைக் கொழுக்கட்டை

12.கருப்பட்டிப் பாயாசம்

13.எள்ளு கருப்பட்டிப் பூரண கொழுக்கட்டை

14.கருப்பட்டி மோதகம்

15.கருப்பட்டிப் பணியாரம்

16.நுங்குப் பாயாசம்

17.ஹெல்த் ட்ரிங்

18.ஒடியல் கூழ்

19.பனங்கிழங்குக் காரப் புட்டு

20.பனாட்டு

21.அவிச்ச பனங்கிழங்கும் கட்ட சம்பலும்

22.நுங்கு சர்பத்

23.பனங்கற்கண்டுப் பால்

24.பழம்பாணி

25.புழுக்கொடியல் லட்டு


மே, 1, 2025 குமுதம் சிநேகிதியில் வெளியாகி உள்ளது. 

புதன், 8 ஜூலை, 2026

கேக் முட்டைக் குழம்பு

கேக் முட்டைக் குழம்பு


தேவையானவை:- கேக் துண்டுகள் செய்ய:- முட்டை - 6, பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கவும், பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கவும், ஜீரகம் மிளகு பொடி - 1/2 டீஸ்பூன், உப்பு - 1/4 டீஸ்பூன்.


செய்முறை:- முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும். அதில் வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, மிளகு சீரகப் பொடி போட்டு நன்கு கலக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி முட்டைக் கலவையை ஊற்றி ஆவியில் 10 நிமிடம் வேடவிடவும். அல்லது குக்கரில் தண்ணீர் ஊற்றி வெயிட் போடாமல் பத்து நிமிடம் வைக்கலாம். ஆறியவுடன் சதுரமாகவோ, டைமண்ட் ஷேப்பிலோ துண்டுகள் செய்யவும்.

குழம்புக்கு :- சின்ன வெங்காயம் - 10, வெள்ளைப் பூண்டு - 7, தக்காளி - 2, மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன், மல்லிப் பொடி - 3 டீஸ்பூன், மஞ்சள் பொடி - 1 சிட்டிகை, புளி - 1 நெல்லி அளவு, உப்பு - 1 1/2 டீஸ்பூன், தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் ( அரைத்தது), எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், ஜீரகம் - 1/2 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை:- ஒரு பானில் எண்ணெயை ஊற்றி கடுகு போட்டு வெடித்தவுடன் உளுந்து ஜீரகம் போடவும். கருவேப்பிலை, வெங்காயம், பூண்டு, தக்காளி போட்டு நன்கு வதக்கவும். உப்பு , புளியை 3 கப் தண்ணீரில் ஊறவைத்து சாறு எடுக்கவும். அதில் மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, மஞ்சள் பொடியைப் போடவும். இந்தக் கலவையை பானில் ஊற்றி கொதிவரச் செய்யவும். இதில் அரைத்த தேங்காயைச் சேர்க்கவும். தேவையானால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக் கொதித்ததும் அதில் வெட்டிய முட்டைத்துண்டுகளைப் போடவும். 4 நிமிடம் கொதித்ததும் இறக்கி சூடாக சாதத்தோடு பரிமாறவும்.

ஞாயிறு, 5 ஜூலை, 2026

சைவ மீன் குழம்பு


சைவ மீன் குழம்பு

தேவையானவை :-  கடலை மாவு - அரை கப்,  வாழைக்காய் -1,  எண்ணெய் – 20 மிலி,  பெரிய தக்காளி - 1, சின்ன வெங்காயம் - 15, வெள்ளைப்பூண்டு - 10, இளம் கருவேப்பிலை கொத்துமல்லி - சிறிது.  புளி - நெல்லிக்காய் அளவுஉப்பு - 1 டீஸ்பூன்மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன்மல்லிப்பொடி - 1 டீஸ்பூன்மஞ்சள் பொடி - கால் டீஸ்பூன்தாளிக்க :- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்கடுகுஉளுந்து,வெந்தயம்தலா அரை டீஸ்பூன்பெருங்காயம் - சிறு துண்டுகருவேப்பிலை - 1 இணுக்குஅரைக்க :- வரமிளகாய் - 4, சோம்பு - அரை டீஸ்பூன்சீரகம்,  மிளகு - கால் டீஸ்பூன்உப்பு - கால் டீஸ்பூன்தேங்காய் - கால் மூடி , சின்ன வெங்காயம் - 2, பூண்டு - 1 பல்.


செய்முறை :- வாழைக்காயின் தோல்பகுதியைக் குச்சிகுச்சியாக நீளமாகச் சீவவும். கடலை மாவில் கால் டீஸ்பூன் உப்பு,  மிளகாய்ப்பொடி சேர்த்துத் தோசை மாவுப் பக்குவத்தில் கரைக்கவும். தோசைக்கல்லில் கடலைமாவைத் தோசையாக ஊற்றி நடுவில் இரண்டு வாழைக்காய்க் குச்சிகளை இரண்டு இஞ்ச் இடைவெளியில் போட்டு மூன்றாகவோ நான்காகவோ மடித்து மடித்து எடுக்கவும். அதை மீன் சைஸில் துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்து வைக்கவும். சின்ன வெங்காயம், வெள்ளைப் பூண்டு, தக்காளியைச் சுத்தம் செய்து துண்டாக நறுக்கி வைக்கவும். புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து உப்பு, மஞ்சள் தூள் , மிளகாய்த்தூள், மல்லித்தூள் போட்டு வைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து வெந்தயம் தாளித்து சின்ன வெங்காயம் வெள்ளைப்பூண்டு, தக்காளி , கருவேப்பிலை போட்டு வதக்கவும். இதில் கரைத்துவைத்த புளித்தண்ணீரை ஊற்றவும். இரண்டு கொதி வந்ததும் அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கும் குழம்பில் ஊற்றவும். நன்கு கொதிவரத் துவங்கியதும் வெட்டி வறுத்து வைத்த மீன் துண்டுகளைக் குழம்பில் சேர்க்கவும். ரொம்பவும் கிளறாமல் குழம்பை இறக்கிப் பரிமாறவும்.

வியாழன், 2 ஜூலை, 2026

டாங்கர் சட்னி

டாங்கர் சட்னி


தேவையானவை :- சின்ன வெங்காயம் – 20, வெள்ளைப் பூண்டு – 15, வரமிளகாய் – 6, புளி – ஒரு நெல்லிக்காய் அளவுஉப்பு – அரை டீஸ்பூன்மிளகாய்த் தூள் – கால் டீஸ்பூன்வெல்லம்/சர்க்கரை – கால் டீஸ்பூன்எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்கடுகு – அரை டீஸ்பூன்உளுந்து – அரை டீஸ்பூன்.

 

செய்முறை :- சின்ன வெங்காயம் வெள்ளைப்பூண்டைத் தோலுரித்து நைசாக வட்டமாக அரியவும்வரமிளகாயை விதையில்லாமல் சின்னதாக ஒடித்துக் கொள்ளவும்ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் வரமிளகாயைப் போடவும்லேசாக சிவந்து வாசம் வந்ததும் சின்ன வெங்காயம்வெள்ளைப்பூண்டைப் போட்டு நன்கு வதக்கவும்உப்பு புளியை அரை கப் தண்ணீரில் கெட்டியாகக் கரைத்து ஊற்றவும்மிளகாய்ப் பொடியையும் போட்டு நன்கு கொதித்துச் சுண்டி எண்ணெய் பிரியும் போது வெல்லமோ சர்க்கரையோ போட்டு இறக்கவும். 

திங்கள், 29 ஜூன், 2026

இங்கிலீஷ் காய்கறிப் பிரட்டல்

இங்கிலீஷ் காய்கறிப் பிரட்டல்


தேவையானவை:- காரட் - 2பீன்ஸ் - 15உருளைக்கிழங்கு - 2,  (காலிஃப்ளவர் - 6 துண்டு) , (பட்டாணி - 1/2 கப்) , (பனீர்., பேபிகார்ன்., பட்டர் பீன்ஸ்., குடைமிளகாய்., சோயா( மீல்மேக்கர்) விரும்பினால்) , பெரிய வெங்காயம் - 1தக்காளி - 1வெள்ளைப் பூண்டு - 4 பல்உப்பு - 1/2 டீஸ்பூன். அரைக்க:-வரமிளகாய் - 4சோம்பு - 1 டீஸ்பூன்சீரகம் - 1/2 டீஸ்பூன்தேங்காய் - 2இஞ்ச் துண்டுபொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்சின்ன வெங்காயம் - 2பூண்டு - 1 பல். தாளிக்க:- உளுந்து - 1/ டீஸ்பூன்சோம்பு - 1/4 டீஸ்பூன்கல்பாசிப்பூ - 1 இன்ச் துண்டுபட்டை - 1 இன்ச் துண்டுகருவேப்பிலை - 1 இணுக்கு. , எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:- காய்கறிகளைக் கழுவி தோல் சீவி சதுரங்களாக வெட்டி அரை வேக்காடாய் வேகவைத்துக் கொள்ளவும். வெங்காயம்., தக்காளி பூண்டை உரித்து நறுக்கிக் கொள்ளவும். மசாலாவை அரைத்துக் கொள்ளவும். பானில் எண்ணெயைக் காயவைத்து உளுந்து., சோம்பு., பட்டை., கல்பாசிப்பூ தாளிக்கவும். வெங்காயம்., தக்காளி., பூண்டு போட்டு வதக்கவும். மசாலாவைப் போட்டுப் பக்கங்களில் எண்ணெய் பிரியும்வரை வதக்கவும். உப்பு போடவும். வெந்த காய்களைப் போட்டு மசாலா சேரும்வரை கலக்கவும். 10 நிமிடங்கள் சிம்மில் வேகவைத்து இறக்கவும். சாம்பார் சாதம்., தயிர் சாதம்., சப்பாத்தி., புல்காவுடன் பரிமாறவும்.

வெள்ளி, 26 ஜூன், 2026

வாழைப்பூக் கோளா

வாழைப்பூக் கோளா


தேவையானவை:- வாழைப்பூ - ½,  ஊறவைத்த துவரம் பருப்பு - 1 கப்,  பெரிய வெங்காயம் - 1,  சிவப்பு மிளகாய் - 5,  சோம்பு - 1 டீஸ்பூன்,  சீரகம் - 1/2 டீஸ்பூன்,  மிளகு - 5,  தேங்காய் - 2 இன்ச் துண்டு,  எண்ணெய் - 75 மிலி,  கடுகு - 1 டீஸ்பூன்,  உளுந்து - 1 டீஸ்பூன்,  கருவேப்பிலை - 1 இணுக்கு,  உப்பு - 1 டீஸ்பூன்.

செய்முறை:- வாழைப்பூக்களை நரம்பு எடுத்து சுத்தம் செய்யவும். மிளகாய்., சோம்பு., சீரகம்., மிளகு., உப்பு., தேங்காய் சேர்த்து அரைக்கவும். பருப்பை தனியாகக் கொரகொரப்பாக அரைக்கவும். வாழைப்பூக்களையும் தனியாக அரைக்கவும். பானில் எண்ணெயைக் காய வைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் வெங்காயம் கருவேப்பிலை போடவும். அரைத்த மசாலாவைச் சேர்த்து நன்கு வதக்கவும். 3 நிமிடத்துக்குப் பிறகு அரைத்த பூவைப் போடவும். பின் பருப்பைச் சேர்த்து நன்கு கிளறவும். சிம்மில் வைத்து அடிக்கடி கிளறவும் . இல்லாவிட்டால் அடிப் பிடிக்கும். 10 லிருந்து 15 நிமிடங்கள் வரை கிளறி உதிரியாக வெந்ததும் இறக்கி சாம்பார் சாதம் அல்லது தயிர் சாதத்துடன் பரிமாறவும். இதன் துவர்ப்புச் சுவை ரத்தத்தை சுத்திகரிக்கும்.

செவ்வாய், 23 ஜூன், 2026

கத்திரிக்காய் கோஸமல்லி

கத்திரிக்காய் கோஸமல்லி


தேவையானவை:- கத்திரிக்காய் - 250 கி,  உருளைக்கிழங்கு - 1 வேகவைத்தது ( விரும்பினால்) ,  பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரியவும்,  தக்காளி - 1 பொடியாக அரியவும் ,  பச்சை மிளகாய் - 6 இரண்டாக வகிரவும்,  கருவேப்பிலை - 1 இணுக்கு,  புளி - 1/2 எலுமிச்சை அளவு,  உப்பு - 1 டீஸ்பூன்,  எண்ணெய் - 3 டீஸ்பூன்,  கடுகு - 1 டீஸ்பூன்,  உளுந்து - 1 டீஸ்பூன்,  பெருங்காயம் - 1 சிட்டிகை

செய்முறை:- கத்திரிக்காய்களைக் கழுவி நான்காக நறுக்கவும். பிரஷர் குக்கரில் போதுமான தண்ணீர் சேர்த்து வேகவிடவும். அடுப்பிலிருந்து இறக்கி ஆறியதும் தோலுரித்து மசிக்கவும். உருளைக்கிழங்கையும் மசிக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் ஊறவைத்துச் சாறு எடுக்கவும். ஒரு கடாயில் எண்ணெயை சூடுபடுத்திக் கடுகைப் போடவும். கடுகு வெடித்ததும் உளுந்தைப் போட்டுச் சிவந்ததும் பெருங்காயப் பொடியைப் போடவும். பின் பச்சை மிளகாய், பெரியவெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்கவும். அதில் புளித்தண்ணீரை உப்புடன் சேர்க்கவும். மசித்த கத்திரிக்காயையும், உருளையையும் சேர்த்துக் கொதிக்க விடவும். 5 நிமிடம் சிம்மில் வைத்து அடுப்பிலிருந்து இறக்கி சூடாக இட்லி, தோசை, தாளிச்ச இடியாப்பத்துடன் பரிமாறவும்.

சனி, 20 ஜூன், 2026

வெங்காயக் கோஸ்

வெங்காயக் கோஸ்


தேவையானவை :- பெரிய வெங்காயம் – 2, பெரிய தக்காளி – 1, உருளை – சிறியது – 1, தேங்காய் – 1 மூடிவரமிளகாய் – 10, சோம்பு – அரை டீஸ்பூன்சீரகம் – கால் டீஸ்பூன்பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்முந்திரி – 4, பட்டை – கால் இன்ச் ( விரும்பினால் ), உப்பு – அரை டீஸ்பூன்எண்ணெய் – 2 டீஸ்பூன்உளுந்து – அரை டீஸ்பூன்கிராம்பு – 1 ( விரும்பினால் ), கருவேப்பிலை – 1 இணுக்கு

 

செய்முறை:- பெரியவெங்காயத்தைத் தோலுரித்து தயிர்ப் பச்சடிக்கு நறுக்குவது போல் நீளமாக மெல்லிசாக நறுக்கவும்தக்காளியை துண்டுகள் செய்யவும்உருளையைத் தோலுரித்து வெங்காயம் போல் குச்சி குச்சியாக நறுக்கவும். வரமிளகாய்துருவிய தேங்காய்சோம்புசீரகம்பொட்டுக்கடலைமுந்திரி , உப்பு சேர்த்து சிறிது நீர் விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்.  எண்ணெயைக் காயவைத்து உளுந்து கிராம்பு பட்டை போட்டுத் தாளித்து வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்வெங்காயம் தண்ணி தண்ணியாக வதங்கியதும் உருளைதக்காளியைப் போட்டு வதக்கவும்இரண்டு நிமிடம் கழித்துக் கருவேப்பிலை சேர்த்து அரைத்த விழுதைப் போட்டுத் திறக்கித் தேவையான தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.3 கப் தண்ணீர் சேர்க்கலாம். நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்இட்லிக்குத் தொட்டுக்கொள்ள மிகவும் ருசியாக இருக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...