எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

ILAI ADAI.. இலை அடை.ILAI ADAI..:-
NEEDED :-
IDDLIE RICE - 2 CUPS.
DESICATED COCONUT - 1 CUP
JAGGERY - 1/2 CUP
SALT - 1 PINCH
PLANTAIN LEAF - 2
JACK FRUIT PIECES - 1 CUP ( OPTIONAL)
METHOD:-
WASH AND SOAK RICE FOR 2 HOURS.
GRIND WELL N ADD SALT.
TO REMOVE EXCESS WATER KEEP IT IN A COTTON CLOTH.
ADD COCONUT AND JAGGERY AND MIX WELL.
CUT THE PLANTAIN LEAF INTO 8 PIECES.
SPREAD THE DOUGH IN PLANTAIN LEAVES LIKE A THIN SHEET .
SPRAY COCONUT JAGGERY MIXTURE AND FOLD IT.
IF DESIRES ADD JACK FRUIT PIECES TOO.
PASTE WELL AND STEAM IT FOR 15 MINUTES.
REMOVE THE LEAVES AND SERVE IT AS A EVENING TIFFIN.
FOR PLAIN ILAI ADAI SPRAY ONLY COCONUT.
FOR PLAIN ILAI ADAI KATHAMBA CHUTNEY IS BEST.
இலை அடை :-
தேவையானவை :-
இட்லி அரிசி - 2 ஆழாக்கு
துருவிய தேங்காய் - 1 கப்
தூள் வெல்லம் - 1/2 கப்
உப்பு - 1 சிட்டிகை
வாழை இலை - 2
பலாச்சுளைத் துண்டுகள் - 1 கப் ( விருப்பப்பட்டால்)
செய்முறை :-
அரிசியை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
நன்கு மசிய அரைக்கவும். உப்பு சேர்க்கவும்.
ஒரு காட்டன் துணியில் மாவை கொட்டிவைத்தால் அதிகப்படியான தண்ணீரை எடுத்து விடும்.
தேங்காயையும் வெல்லத்தையும் கலக்கவும்.
இலையை சம துண்டுகளாக வெட்டவும்.
இலையில் மாவை மெல்லிய தகடாக தட்டவும்.
அதில் தேங்காய் வெல்லக் கலவையை பரப்பவும்.
விருப்பப்பட்டால் பலாச்சுளைதுண்டுகளைத் தூவவும்.
ரெண்டாக மடித்து ஒட்டவும்.
ஆவியில் 15 நிமிடங்கள் வேகவைக்கவும்.
வாழை இலைகளை எடுத்துவிட்டு மாலைச் சிற்றுண்டியாகப் பரிமாறவும்.
ப்ளைன் இலை அடைக்கு வெறும் தேங்காய் மட்டும் தூவி செய்யவும்.
இதற்குத் தொட்டுக் கொள்ள கதம்பச் சட்னி நன்றாக இருக்கும்.

4 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...