எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

தக்காளித் தொக்கு

தக்காளித் தொக்குதேவையானவை:- தக்காளி - அரை கிலோ, நல்லெண்ணெய் - 25 கி, வரமிளகாய்த்தூள் - 25 கி, வெந்தயம், கடுகு தலா அரை டீஸ்பூன், உப்பு - 1 டீஸ்பூன், கருவேப்பிலை - 1இணுக்கு. பெருங்காயப் பொடி - 1  சிட்டிகை.

செய்முறை:- தக்காளியைப் பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும்.  ஒரு கனமான வாணலியில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, வெந்தயம் போடவும். இரண்டும் வெடித்துச் சிவந்ததும் பெருங்காயப்பொடி, கருவேப்பிலை போட்டு தக்காளியைப் போடவும். பத்து நிமிடம் ஹை ஃப்ளேமில் வைத்துக் கிண்டியபின் உப்பும் மிளகாய்த்தூளும் சேர்த்து நன்கு கலந்து விட்டு சிம்மில் வைத்து வேக விடவும். கிளறிக் கொண்டே இருக்க வேண்டும் இல்லாவிட்டால் பிடித்துவிடும். விரும்பினால் கடைசியில் சிறிது சீனியோ வெல்லமோ சேர்க்கலாம். தொக்கு நன்கு வெந்து சுருண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் இறக்கி சப்பாத்தி, தோசை, இட்லி, சாதத்துடன் பரிமாறவும். 

  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...