தேன் நெல்லிக்காய்களைக் கடையிலேயே வாங்கி உண்போம் அதை வீட்டில் எப்படிச் செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையானவை :- முழு நெல்லிக்காய்கள் - 5, வெல்லம் - ஒரு கைப்பிடி, தேன் - 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:- நெல்லிக்காயில் மேற்புறமெங்கும் ஊசியால் துளையிட்டு ஆவியில் நன்கு வேகவைக்கவும். நெல்லிக்காய்கள் ஆறியபின் தேனும் வெல்லமும் கலந்து குலுக்கி வைக்கவும். மூன்று நாட்கள் வெய்யிலில் வைத்து எடுத்து பத்து நாட்கள் நன்கு ஊறியபின் உபயோகிக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக