தேவையானவை :- உளுந்தம்பருப்பு - 1கப், கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், தயிர் - 2 கப் புளிப்பில்லாதது, உப்பு - அரை டீஸ்பூன், பச்சைமிளகாய் - 1, காரட் துருவியது - 1 டீஸ்பூன், கொத்துமல்லித்தழை - 1டீஸ்பூன் , காராபூந்தி - 1 டேபிள் ஸ்பூன் ( விரும்பினால் ) . எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை:- உளுந்தம் பருப்பையும் கடலைப்பருப்பையும் கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வழுவழுப்பாக அரைத்து எடுக்கவும். எண்ணெயைக் காயவைத்து வடைகளாகப் பொரித்து எடுக்கவும். தயிரைக் கடைந்து லேசாக உப்பு சீனி சேர்த்து நன்கு கலக்கி வடைகளின் மேல் ஊற்றவும். துருவிய காரட் , கொத்துமல்லித்தழை தூவிப் பரிமாறவும். விரும்பினால் வடையின் மேல் கடுகு சீரகம் பெருங்காயத்தூள் தாளித்தும் கொட்டலாம். காராபூந்தி தூவியும் பரிமாறலாம். கோடைக்கு ஏற்ற ஜில் ஜில் தயிர்வடை ரெடி.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!