எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

AMORPHOPHALUS TAMARIND GRAVY. கருணைக்கிழங்கு புளிக்குழம்பு.

AMORPHOPHALUS TAMARIND GRAVY.:-
NEEDED:-
AMORPHOPHALUS - 250 GMS
SMALL ONION - 10 NOS
GARLIC - 7 PODS
TOMATO - 1 NO
TAMARIND - 1 LEMON SIZE BALL.
SALT - 2 TSP
TURMERIC POWDER - 1 PINCH
RED CHILLI POWDER - 2 TSP
CORRIANDER POWDER - 4 TSP
CURRY LEAVES - 1 ARK
OIL - 30 ML
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
JEERA - 1/2 TSP
FENUGREEK - 1/4 TSP
ASAFOETIDA - 1/8 PIECE


METHOD :-

WASH AND PRESSURE COOK THE AMORPHOPHALUS. KEEP ASIDE FOR 10 MIN. WHEN IT COOLS PEEL AND MAKE INTO THICK SLICES. PEEL SMALL ONION AND GARLIC AND HALVE THEM. CUT THE TOMATO INTO SMALL PIECES. SOAK THE TAMARIND IN 3 CUPS OF WATER . SQUEEZE THE PULP AND ADD SALT WITH THAT. HEAT OIL IN A KADAI ADD MUSTARD . WHEN IT SPLUTTERS ADD ORID DHAL., JEERA., FENUGREEK ., AND ASAFOETIDA. ADD CURRY LEAVES , SMALL ONION., GARLI AND TOMATO. SAUTE FOR 3 MINUTES THEN ADD THE AMORPHOPHALUS . POUR THE TAMARIND PULP WITH SALT AND ADD TURMERIC POWDER ,RED CHILLI POWDER AND CORRIANDER POWDER. STIRR WELL. BRING TO BOIL AND KEEP IT IN SIM FOR 10 MINUTES COVERED WITH A LID. WHEN OIL SEPERATES REMOVE FROM FIRE AND SERVE HOT WITH PLAIN RICE AND PAPPADS.


கருணைக்கிழங்கு புளிக்குழம்பு:-
தேவையானவை:-
கருணைக்கிழங்கு - 250 கி
சின்ன வெங்காயம் - 10
வெள்ளைப் பூண்டு - 7

தக்காளி - 1

புளி - 1 எலுமிச்சை அளவு

உப்பு - 2 டீஸ்பூன்

மஞ்சள்பொடி - 1 சிட்டிகை

மிளகாய்ப்பொடி - 2 டீஸ்பூன்

மல்லிப்பொடி - 4 டீஸ்பூன்

கருவேப்பிலை - 1 இணுக்கு

எண்ணெய் - 30 மிலி

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்து - 1 டீஸ்பூன்

ஜீரகம் - 1/2 டீஸ்பூன்

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

பெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டு

செய்முறை:-

கருணைக்கிழங்குகளை நன்கு கழுவி குக்கரில் வேகவைக்கவும். 10 நிமிடம் ஆறியபின் தோலுரித்து துண்டுகளாக நறுக்கவும். சின்ன வெங்காயம்., பூண்டை தோலுரித்து இரண்டாக நறுக்கவும். தக்காளியைத் துண்டுகள் செய்யவும். புளியை 3 கப் தண்ணீரில் ஊறவைத்து சாறு எடுத்து உப்பு சேர்க்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து போட்டு சிவந்ததும்., சீரகம்., வெந்தயம்., பெருங்காயம்., போடவும். கருவேப்பிலை., சின்ன வெங்காயம்., பூண்டு., தக்காளி போட்டு வதக்கி கருணைக்கிழங்கை சேர்க்கவும். அதில் புளித்தண்ணீரை ஊற்றி மஞ்சள் பொடி ., மிளகாய்ப்பொடி., மல்லிப்பொடி போடவும். நன்கு கொதிக்க வைத்து பின் 10 நிமிடம் மூடிபோட்டு சிம்மில் வைத்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கி சூடாக சாதம் அப்பளத்தோடு பரிமாறவும்.

6 கருத்துகள்:

  1. சூப்பர்க்கா...இதனுடன் அம்மா இறால் சேர்த்து செய்வாங்க..

    பதிலளிநீக்கு
  2. கருணை கிழங்கு இங்கே கிடைக்கல, அக்கா... அடுத்த முறை, சென்னை வரும் போது - நோ ஹோட்டல் சாப்பாடு.... அக்கா வீட்டுலதான்.

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஒங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  4. மீன் கிடைக்காத நேரம் இது போல் கருனை கிழங்கு சேப்பங்கிழங்கு புளி குழம்பு செய்வதுண்டு

    புளிப்பு காரமா நல்ல இருக்குதேனகா

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...