எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 8 அக்டோபர், 2011

TARO FRY.சேப்பங்கிழங்கு வறுவல்.

TARO FRY:-
NEEDED:-

TARO - 1/2 KG

RED CHILLY POWDER - 2 TSP

SALT - 1 TSP

OIL - 50 ML.

MUSTARD - 1 TSP

ORID DHAL - 1 TSP

SOMPH/FENNEL - 1/4 TSP

CORN FLOUR - 1 TSP ( OPTIONAL)


METHOD:-

WASH AND PRESSURE COOK THE TARO. PEEL AND SLICE THEM. HEAT OIL IN A PAN ADD MUDTARD WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN ADD FENNEL THEN TARO. FRY FOR 3 MINUTES THEN ADD SALT AND CHILLY POWDER. STIRR WELL AND KEEP ROASTING FOR 10 MINUTES.IF U NEED MORE CRISPY THEN SPRAY CORN FLOUR AND STIRR FOR 2 MORE MINUTES. SERVE HOT WITH CURD RICE .


சேப்பங்கிழங்கு வறுவல்:-

தேவையானவை:-

சேப்பங்கிழங்கு - 1/2 கிலோ

வரமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

உப்பு - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 50 மிலி

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்து - 1 டீஸ்பூன்

சோம்பு - 1/4 டீஸ்பூன்

சோள மாவு - 1 டீஸ்பூன் ( விரும்பினால்)


செய்முறை:-

சேப்பங்கிழங்குகளை நன்கு கழுவி பிரஷர் குக்கரில் வேக விடவும். ரொம்பக் குழைய வேண்டாம். தோலுரித்து வட்டங்களாக நறுக்கி வைக்கவும். பானில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து போட்டு சிவந்ததும், சோம்பு போட்டு சேப்பங்கிழங்குகளைப் போட்டு 3 நிமிடம் வதக்கவும். பின் உப்பு, மிளகாய்ப்பொடி போட்டு நன்கு கிளறி 10 நிமிடங்கள் தணலில் ரோஸ்ட் செய்யவும். அதிக மொறுமொறுப்புக்கு சோளமாவு தூவி இன்னும் இரண்டு நிமிடங்கள் வைக்கவும். சூடாக தயிர் சாதத்தோடு பரிமாறவும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...