சிவப்பு பட்டர்பீன்ஸ் மசாலா. RED BUTTERBEANS MASALA.
தேவையானவை :- சிவப்பு
பட்டர் பீன்ஸ் – 1 கப் உரித்தது. பெரிய வெங்காயம்
– 1, தக்காளி – 1, சோம்பு மிளகாய்த்தூள் – அரை தேக்கரண்டி, உப்பு – கால் தேக்கரண்டி,
இஞ்சி பூண்டு பேஸ்ட் – கால் டீஸ்பூன் ( தேவைப்பட்டால் ), எண்ணெய் – 3 டீஸ்பூன், பட்டை,
கிராம்பு, இலை – சிறிது.
செய்முறை:- சிவப்பு
பட்டர்பீன்ஸை உரித்து குக்கரில் போட்டு ஒரு விசில் வரும்வரை வேகவிடவும். எண்ணெயில்
பட்டை, இலை, கிராம்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இதில்
இஞ்சி பூண்டு பேஸ்டைப் போட்டு வதக்கி அதில் சோம்பு மிளகாய்த்தூளும் உப்பும் சேர்த்து
திறக்கவும். இதில் தக்காளியையும் போட்டு வதக்கி வேகவைத்த பட்டர்பீன்ஸை தண்ணீருடன் ஊற்றவும். நன்கு கலக்கி மூடி வைக்கவும். எல்லாம் சேர்ந்து
நன்கு வெந்ததும் இறக்கி தயிர்சாதத்துடன் பரிமாறவும். சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ள
ஏற்றது.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!