எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

வாழைக்காய் காரப் பொரியல்.

வாழைக்காய் காரப் பொரியல் :-

தேவையானவை :- வாழைக்காய் - 1, உப்பு - அரை டீஸ்பூன், சாம்பார் பொடி - ஒன்றரை டீஸ்பூன், பூண்டு - 3 பல், கருவேப்பிலை - 1 இணுக்கு, எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு உளுந்து - தலா ஒரு டீஸ்பூன், சோம்பு - கால் டீஸ்பூன். மஞ்சள்தூள் - 1 சிட்டிகை.

செய்முறை :- வாழைக்காயைத் தோல் சீவி செவ்வகத் துண்டுகளாக நறுக்கவும். அதில் உப்பு, சாம்பார் பொடி, நசுக்கிய பூண்டு, கருவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு நன்கு பிசறவும். அதில் இருக்கும் நீர்ச்சத்தே போதும். இரு நிமிடங்கள் வைக்கவும்.

கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் சோம்பு கருவேப்பிலை தாளித்து மசாலா பிரட்டிய வாழைக்காயைச் சேர்க்கவும். ஒரு நிமிடம் தீயை ஹையில் வைத்து வதக்கி அதன் பின் சிம்மில்  5 - 10 நிமிடங்கள்  வைத்து அவ்வப்போது கிளறி விட்டு இறக்கவும். சுவையான வாழைக்காய் பொரியல் தயார் . தயிர் சோற்றுடன் இது அட்டகாசமான காம்பினேஷன்.
  

2 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...