எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 17 செப்டம்பர், 2018

மோர் மிளகாய் வத்தல்.

மோர் மிளகாய் வத்தல்.

தேவையானவை :-

ஊசி மிளகாய் - கால் கிலோ,புளித்த தயிர் - ஒரு கப் , உப்பு - 2 டீஸ்பூன், ( 10 கிராம்) , எண்ணெய் - வறுக்கத் தேவையான அளவு. ( அரை கப் )

செய்முறை :-  மிளகாய்களை காம்பு விட்டு லேசாக மேலும் கீழும் கீறிக்கொள்ளவும். தயிரை நன்கு கடைந்து உப்பு சேர்த்து பச்சைமிளகாய்களைப் போட்டு நன்கு உரசவும். இரவு உரசி வைத்து மறுநாள் வெய்யிலில் எடுத்துக் காய வைக்கவும். மிச்ச மோரையும் வெய்யிலில் வைக்கவும். அன்று  மாலையும் மிளகாய்களை அதே மோரில் போட்டு நன்கு கலக்கி ஊறவைக்கவும். மறுநாளும் திரும்பக் காய வைக்கவும். இப்படி மோர் தீரும்வரை காயவைத்து நன்கு சுக்காகக் காய்ந்ததும் எடுத்துக் காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும். தேவையான பொழுது எண்ணெயைக் காயவைத்து மிதமான தீயில் பக்குவமாகப் வறுத்து உபயோகிக்கவும்.
  

2 கருத்துகள்:

  1. நாங்கள் ஊசி மிளகாயில் இது போடுவதில்லை. தஞ்சாவூர்க் குடைமிளகாயில் போடுவோம்.

    பதிலளிநீக்கு
  2. அதுவும் போடுவாங்க ஸ்ரீராம் :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...