பூசணிக்காய் சாம்பார். :-
தேவையானவை :- பூசணிக்கீத்து - 1, வேகவைத்த துவரம்பருப்பு - 1 கப், சின்ன வெங்காயம் - 10, தக்காளி - 1,பெருங்காயம் - 1 துண்டு. சாம்பார்தூள் - 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள்- 1 சிட்டிகை, புளி - 1 நெல்லி அளவு, உப்பு - 2 டீஸ்பூன், தாளிக்க :- எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து, சீரகம் தலா அரை டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு, கொத்துமல்லி தழை - சிறிது.
செய்முறை :- பூசணிக்கீத்தை ஒரு இஞ்ச் சதுரமாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தை உரித்து இரண்டாக வெட்டவும். தக்காளியைத் துண்டு செய்யவும். மூன்றையும் வெந்த துவரம்பருப்புடன் ப்ரஷர் குக்கரில் போட்டு மஞ்சள் தூளையும் பெருங்காயத்தையும் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வைத்து இறக்கவும். புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து சாறு எடுத்து உப்பையும் சாம்பார் தூளையும் போட்டு வைக்கவும். வெந்த காயில் இந்த புளிக்கலவையை ஊற்றி இரண்டு கொதி கொதிக்க வைக்கவும். இரண்டு டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து சீரகம் தாளித்துக் கருவேப்பிலை சேர்த்து சாம்பாரில் சேர்க்கவும். கொத்துமல்லியைச் சேர்த்து இறக்கி சூடான சாதம், தோசை, இட்லியுடன் பரிமாறவும்.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!