24.பட்டர்பீன்ஸ் பேபிகார்ன் பிரியாணி
தேவையானவை :- பட்டர்பீன்ஸ் 150 கி, பேபிகார்ன் - 4, பொன்னி பச்சரிசி - 2 கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன், அரைக்க:- பச்சை மிளகாய் 5, சோம்பு - 1 டீஸ்பூன், கசகசா - அரை டீஸ்பூன், முந்திரி -6, கொத்துமல்லி+ புதினா ஒரு கைப்பிடி, தேங்காய்ப்பால் - 2 கப், உப்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் + நெய் - 2 டேபிள் ஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2, பிரிஞ்சி இலை - 1.
செய்முறை :- பேபிகார்னை நீளத் துண்டுகள் செய்யவும். பட்டர்பீன்ஸை குக்கரில் ஒரு விசில் வேகவைத்து நீரை வடிக்கவும். அரிசியைக் களைந்து ஊறவைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைக்கவும். ப்ரஷர் குக்கரில் எண்ணெய் + நெய்யைச் சேர்த்துப் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து நீளமாக அரிந்த வெங்காயம் போட்டு மென்மையாகும்வரை வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கி பட்டர்பீன்ஸ், பேபிகார்ன், அரிசியைச் சேர்த்து வறுக்கவும். தக்காளியையும் உப்பையும் போட்டு அரைத்த மசாலாவை ஊற்றவும். தேங்காய்ப்பாலுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி குக்கரை மூடி ஒரு விசில்வரும்வரை வைக்கவும். திறந்து கிளறி குடைமிளகாய் தொக்கு, வாழைக்காய் சிப்ஸுடன் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக