எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 17 செப்டம்பர், 2025

ஆட்டிக் கிண்டும் கொழுக்கட்டை

ஆட்டிக் கிண்டும் கொழுக்கட்டை



தேவையானவை:- இட்லி அரிசி  - 2 கப், துருவிய தேங்காய்  - 1 கப்பொடியாக அரிந்த வெங்காயம் - 1/2 கப்வரமிளகாய் - 4  விதை நீக்கி சின்னதாக வெட்டவும்., கருவேப்பிலை - 1 இணுக்குஉப்பு - 1 டீஸ்பூன்உளுந்து - 1 டீஸ்பூன்ஜீரகம் - 1/2 டீஸ்பூன்எண்ணெய் - 3 டீஸ்பூன்.

செய்முறை :- இட்லி அரிசியைக் கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும்கொரகொரப்பாக அரைக்கவும்பானில் எண்ணெயைக் காயவைத்து உளுந்து., சீரகம்., வரமிளகாய்., கருவேப்பிலை போடவும்வெங்காயம் போட்டு நன்கு வதக்கி  மாவை  ஊற்றவும்உப்பு  சேர்க்கவும். 5 நிமிடம் நன்கு கிளறி கையில் ஒட்டாமல் வரும்போது தேங்காய்த்துருவல்  சேர்க்கவும்அடுப்பை அணைத்து மாவைக்  கையால் நன்கு பிசைந்து எலுமிச்சை உருண்டைகளாகவும் பிடி கொழுக்கட்டைகளாகவும் பிடித்து ஆவியில் 20 நிமிடம் வேகவிடவும்சூடாக வரமிளகாய் சட்னியோடு பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...