எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

PINEAPPLE RASAM.. பைனாப்பிள் ரசம்..

PINEAPPLE RASAM..:-
NEEDED :-
PINEAPPLE - 2 SLICES
BOILED THUVAR DHAL - 1TBLSPN.
TOMATO - 1 NO
TAMARIND - 1 AMLA SIZE BALL
SALT - 2 TSP
RED CHILLIES - 2 NOS
GARLIC - 4 PODS
TURMERIC - 1 TSP
JEERA PEPPER POWDER - 2 TSP
DHANIA POWDER - 1 TSP
OIL - 2 TSP
MUSTARD - 1 TSP
URAD DHAL - 1 TSP
JEERA - 1 TSP
FENUGREEK 1/4 TSP
CURRY LEAVES - 1 ARK
ASAFOETIDA - 1 / 8 INCH PIECE
CORRIANDER LEAVES - 1 TSP CHOPPED.

METHOD:-
CRUSH PINEAPPLE AND KEEP ASIDE.. SMASH TOMATOES. TAKE TAMARIND PULP IN 3 CUPS OF WATER ADD THUVAR DHAL ., TOMATOES AND PINEAPPLE. ADD SALT., TURMERIC., CRUSHED GARLIC., DHANIA POWDER., JEERA PEPPER POWDER.
HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD URAD DHAL., JEERA., ASAFOETIDA., FENUGREEK AND CURRY LEAVES. HALVE THE CHILLIES AND ADD IT. ADD CURRY LEAVES AND POUR THE TAMARIND PULP IN IT.. BRING TO BOILING POINT AND REMOVE FROM FIRE SPRAY CORRIANDER LEAVES AND SERVE HOT WITH RICE PAPPADS AND URULAI MASALA.

U CAN HAVE IT AS SOUP TOO.

THIS IS SERVED IN CHETTINADU MARRIAGES.

தேவையானாவை:-
பைனாப்பிள் துண்டுகள் - 2 ஸ்லைசஸ்
வெந்த துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1
புளி - 1 நெல்லி அளவு
உப்பு - 2 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
பூண்டு - 4 பல்
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
மிளகு ஜீரகப் பொடி - 2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கருவேப்பிலை- 1 இணுக்கு
பெருங்காயம் - 1 /8 இன்ச் துண்டு
கொத்துமல்லித்தழை - 1 டீஸ்பூன் நறுக்கியது

செய்முறை :-
பைனாப்பிளை மசிக்கவும். தக்காளியை கரைக்கவும். புளியை 3 டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து சாறு எடுக்கவும் . இதில் வெந்த துவரம் பருப்பு., பைனாப்பிள்., தக்காளி., நசுக்கிய பூண்டு., மஞ்சள் பொடி., உப்பு., தனியா தூள்., மிளகு ஜீரகப் பொடி., சேர்க்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும்., ஜீரகம்., வெந்தயம் பெருங்காயம் போட்டு., ரெண்டாகக் கிள்ளிய வரமிளகாய்., கருவேப்பிலை போடவும். இதில் புளிக்கரைசலை ஊற்றி நு்ரைத்துக் கொதிவரும் நிலையில் எடுத்து கொத்துமல்லி தூவி சாதம் ., அப்பளம்., உருளை வறுவலுடன் பரிமாறவும்..

அப்படியே சூப் போலவும் குடிக்கலாம்.

இது செட்டிநாட்டு திருமணங்களில் பரிமாறப்படும்..

7 கருத்துகள்:

  1. என்ன எங்கு பார்த்த்தாலும் வலை உலகில் ரசாமா இருக்கு.

    தேனக்கா நான் என் பையன்கள் ரசம் பிரியர்கள்.

    பைனாப்பிள் ரசம் பிலம்ஸ் ரசம், தக்காளி ரசம், அரைத்து விட்ட ரசம் இன்னும் பல வகை.
    சூப் போல குடிக்க் வும் அருமையாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  2. சைடில் உள்ள பழங்களும் , ஜூஸும் தேன்னக்கா

    எல்லாம் உங்களை போலவே இனிக்குது,

    பதிலளிநீக்கு
  3. நன்றி பிரியா., ஜலீலா., அப்பாவி தங்கமணி..

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...