எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 28 ஏப்ரல், 2011

HELIOTROPE., PURPLE FRUITED PEA EGG PLANT RASAM. தூதுவளை ரசம்.




HELIOTROPE ., PURPLE FRUITED EGG PLANT RASAM.:-

NEEDED :-

PURPLE FRUITED EGG PLANT - 1 BUNCH

BOILED THUVAR DHAL WATER - 1 CUP

TOMATO - 1 NO

RED CHILLIES - 2 NOS

TAMARIND - 1 AMLA SIZE BALL.

SALT - 1 TSP

PEPPER JEERA POWDER - 1 TSP

TURMERIC POWDER - 1/4 TSP

DHANIYA POWDER - 1/2 TSP.

GARLIC - 2 PODS (OPTIONAL)

OIL - 1 TSP

MUSTARD - 1 TSP

JEERA - 1/2 TSP

FENUGREEK - 1/4 TSP

ASAFOETIDA - 1/8 INCH PIECE.


METHOD :-

CLEAN AND WASH THE GREEN ., CUT THEM INTO SMALL PIECES AND SLIGHTLY SMASH THEM WITH A STONE. SOAK TAMARIND IN 4 CUPS OF WATER AND TAKE THE PULP OUT OF IT . ADD SALT AND THUVAR DHAL WATER IN IT . ADD THE SMASHED GARLIC AND TOMATO . ADD THE TURMERIC POWDER., PEPPER JEERA POWDER., DHANIYA POWDER IN IT. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD JEERA AND FENUGREEK AND ASAFOETIDA. THEN ADD THE HALVED CHILLIES AND PURPLE EGG PLANT . SAUTE FOR A MINUTE THEN ADD THE TAMARIND PULP IN IT. BRING TO PREBOIL STAGE AND SWITCH OFF THE GAS. SERVE IT AS A SOUP OR WITH PLAIN RICE. ITS GOOD FOR RELEIVING THE BODY PAIN AND FOR COLD.


தூதுவளை ரசம்:-

தேவையானவை :-

தூதுவளைக் கீரை - 1 சிறு கட்டு

துவரம் பருப்பு வேகவைத்த தண்ணீர் - 1 கப்

தக்காளி - 1

வரமிளகாய் - 2

புளி - 1 நெல்லிக்காய் அளவு

உப்பு - 1 டீஸ்பூன்

மிளகு ஜீரகப் பொடி - 1 டீஸ்பூன்

மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்

மல்லிப் பொடி - 1/4 டீஸ்பூன்

வெள்ளைப் பூண்டு - 2 பல் ( விரும்பினால்)

எண்ணெய் - 1 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

ஜீரகம் - 1/2 டீஸ்பூன்

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

பெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டு



செய்முறை :-

தூதுவளையை சுத்தம் செய்து கழுவி துண்டுகளாய் வெட்டவும். லேசாக கல்லில் போட்டு நைத்து வைக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து உப்பு சேர்க்கவும். பருப்புத்தண்ணீரையும் சேர்க்கவும். தக்காளியைக் கரைத்து ., பூண்டை நசுக்கிப் போடவும். அதில் மிளகு ஜீரகப் பொடி., மஞ்சள் பொடி., தனியா பொடி போடவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்தவுடன் ., ஜீரகம்., வெந்தயம்., பெருங்காயம் போடவும். இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய்., தூதுவளைக் கீரையைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கி கரைத்த புளித்தண்ணீரை ஊற்றவும். நன்கு நுரை கூடி வரும் போது இறக்கி சூடாக சூப் போல அருந்தக் கொடுக்கவும் அல்லது குழைவான சாத்தோடு பரிமாறவும். இது உடல் வலி மற்றும் சளியை குணப்படுத்தும்.

5 கருத்துகள்:

  1. அம்மா செவாங்க அக்கா இந்டஹ் ரசம்.எனக்கு மறந்தே போச்சு,உங்க ரெசிபியை பார்த்தபிறகுதான் ஞாபகம் வருது.இதன் ஆங்கிலப்பெயரும் தெரிந்துக் கொண்டேன்.நன்றி அக்கா!!

    ஆஹா அக்கா சைட்ல என் பெயரை விதவிதமா போட்ருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  2. தூதுவளையின ஆங்கில பெயரினை நான் தெரிந்து கொண்டதில் சந்தோசம்...பகிர்வுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  3. முதன் முறையாக கேள்விப் படுகிறேன்
    அருமை

    பதிலளிநீக்கு
  4. http://samaiyalattakaasam.blogspot.com/2011/04/blog-post_21.html இது தோழிகள் அனைவருக்கும் கொடுத்த அவார்டு, வந்து பெற்றுங்கொள்ளுஙக்ள் தேனக்கா.
    ரொம்ப நல்ல இருக்கு ரசம் என்றால் வித விதமா வைக்க பிடிக்கும்,
    ஆங்கில பெயரும் இருப்பதால் இங்கு தேடி பார்க்கீறேன்

    பதிலளிநீக்கு
  5. நன்றி மேனகா.. அவார்ட்ஸ் தந்த தானைத் தலைவியே..:)

    நன்றீ கீதா

    நன்றி ராம்ஜி

    நன்றி ஜலீலா .. அவார்டுக்கும் :))

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...