எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 23 ஜூலை, 2013

JEERA KOZHUKKATTAI. சீரகக் கொழுக்கட்டை.

JEERA KOZHUKKATTAI:-
NEEDED :-
BOILED RICE FLOUR/ IDIYAPPA MAAVU - 1 CUP
JEERA -  1 TSP
SALT - 1/3 TSP
CHOPPED ONION - 1 TBL SPN ( OPTIONAL)
GRATED COCONUT -  1 TBLSPN ( OPTIONAL )
HOT WATER - NEEDED.

METHOD :-
ADD JEERA, SALT, ONION, COCONUT  TO THE RICE FLOUR WITH ENOUGH HOT WATER AND KNEAD WELL . MAKE IT INTO A TIGHT DOUGH. TAKE A PINCH OF DOUGH AND ROLL THEM WITH FINGERS TO MAKE SMALL KOZHUKKATTAI ( BUDS).

BOIL WATER IN A PAN.POUR THE KOZHUKKATTAIS AND COOK FOR 10 MINUTES. STIRR THEM AFTER 5 MINUTES. ( IF U STIRR IMMEDIATELY AFTER ADDING IT TO THE  BOILED WATER THEN IT WILL BE DISSOLVED )

AFTER 10 MINUTES DRAIN IT AND SERVE HOT WITH PARUPPU THUVAIYAL.

சீரக கொழுக்கட்டை:-
தேவையானவை :-
புழுங்கல் அரிசி மாவு / கொழுக்கட்டை மாவு/ இடியாப்ப மாவு - 1 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/3 டீஸ்பூன்
வெங்காயம் - பொடியாக அரிந்தது 1 டேபிள் ஸ்பூன் ( விரும்பினால்)
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் ( விரும்பினால்)
வெந்நீர் - தேவையான அளவு.

செய்முறை:-
சீரகம், வெங்காயம், தேங்காய், உப்பை மாவில் போடவும். தேவையான தண்ணீர் ஊற்றி கெட்டியாகப் பிசையவும்.விரலால் கிள்ளி சீடைக்காய் அளவு எடுத்து தட்டிப் போடவும்.

தண்ணீரைக் கொதிக்க வைத்து கொழுக்கட்டைகளைப் போடவும்.10 நிமிடம் வேக விடவும். 5 நிமிடம் வெந்தபின்பே கரண்டியால் கிளறி விடவும். ( போட்ட உடன் கிண்டினால் மாவு வெந்நீரில் கரைந்து விடும்.)

10 நிமிடம் கழித்து வடித்து எடுத்து சூடாக பருப்புத் துவையலுடன் பரிமாறவும்.

4 கருத்துகள்:

  1. வீட்டில் இது எல்லாம் சர்வ சாதாரணம்...!

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  3. இப்போது தான் முதல் முறை சீரக கொழுக்கட்டை பார்க்கிறேன். ருசியான உணவு. அன்புந் அன்றிகள்பா பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...