தேவையானவை:- கற்பூரவல்லி/ஓமவல்லி இலை - 10. பஜ்ஜி மிக்ஸ் - 1 கப், அல்லது கடலை மாவு -முக்கால் கப், அரிசி மாவு - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன். எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை:- கற்பூரவல்லி/ஓமவல்லி இலைகளைப் பறித்து நீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பஜ்ஜி மிக்ஸை அல்லது கடலைமாவு அரிசி மாவு உப்பு மிளகய்த்தூளை கால் கப் தண்ணீர் ஊற்றிக் கரைத்துக் கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து கற்பூரவல்லி இலைகளை மாவுக்கரைசலில் நனைத்துப் பொரித்தெடுக்கவும். இது சளி, இருமலுக்கு நல்லது. கஷாயமாக சாப்பிட முடியாதவர்கள் இதில் இரண்டை சாப்பிடலாம்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!