தேவையானவை.:-
சிக்கன் - 1/2 கி
பாஸ்மதி அரிசி - 3 கப்
பெரிய வெங்காயம் - 4
தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட். - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
வரமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
புதினா, கொத்துமல்லி - 3 டேபிள் ஸ்பூன் பொடியாக அரிந்தது.
எலுமிச்சை சாறு - 1/2 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
உப்பு - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
பட்டை இலை - 1
பட்டை - 4 இஞ்ச்
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
கல்பாசிப்பூ - சிறிது.
செய்முறை:-
சிக்கனைக் கழுவி தண்ணீரை வடித்துப் பிழிந்து வைக்கவும். பாசுமதி அரிசியைக் களைந்து வறுத்து வைக்கவும். பிரஷர் குக்கரில் எண்ணெயைக் காயவைத்து பட்டை இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசிப்பூ போடவும். இதில் பொடியாக அரிந்த வெங்காயத்தைப் போட்டு நன்கு தண்ணீராக வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கி சிக்கனைச் சேர்க்கவும். அதில் பாதி பொடியாக அரிந்த தக்காளி,தயிர், பச்சை மிளகாய், வரமிளகாய்த்தூள், தனியா தூள், மஞ்சள் பொடி போட்டு, பாதி புதினா, கொத்துமல்லித்தழைகளைப் போட்டு வதக்கி அரை கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும்வரை ப்ரஷர் குக்கரில் வைக்கவும்.
ஆறியதும் திறந்து பாசுமதி அரிசி, மிச்ச தக்காளி, புதினா, கொத்துமல்லித்தழைகளை போட்டு 5 கப் தண்ணீர் உப்பு சேர்த்து கிளறவும். ( ஏற்கனவே ஒரு கப் தண்ணீரும் தயிரும் இருப்பதால் 5 கப் போதும் . ). ஒரு விசில் வரும்வரை வைத்து இறக்கவும். எலுமிச்சைச் சாறைப் பிழிந்து கிளறி சுடச் சுட உருளை சிப்ஸ், அவித்த முட்டை, கத்திரிக்காய் க்ரேவி, வெங்காயத் தயிர்ப்பச்சடியுடன் பரிமாறவும்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!