தேவையானவை :-
வாழைப்பழம் - 1
ஆப்பிள் - 1
மாம்பழம் - அரைபாகம்
பலாச்சுளை - 2
பைனாப்பிள் - 1 ஸ்லைஸ்
ஆரஞ்சு - 1
சாத்துக்குடி - 1
கறுப்பு திராக்ஷை - 10
பச்சை திராக்ஷை - 10
பேரீச்சம்பழம் - 2
கிஸ்மிஸ் பழம் - 20
வறுத்த முந்திரி - 10
பாதாம் - 5
பிஸ்தா - 10
சாரைப்பருப்பு - 1 டீஸ்பூன்
செம்மாதுளை முத்துக்கள் - 1 டேபிள் ஸ்பூன்
கஸ்டர்ட் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
சீனி - 2 டேபிள் ஸ்பூன்
பழ எசன்ஸ் - தேவைப்பட்டால் - 3 சொட்டு.
ஐஸ்க்ரீம் - 2 ஸ்கூப் ( வனிலா/பட்டர்ஸ்காட்ச்)
செர்ரி - 10 அலங்கரிக்க
செர்ரி - 10 அலங்கரிக்க
( ஃப்ருட் டின் + மில்க் மெயிட் ) - கிடைத்தால் இவைகளிலும் சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.
பாலைக்காய்ச்சவும். அதில் ஒரு கப் எடுத்து ஆறவைத்து கஸ்டர்ட் பவுடரைக் கலந்து திரும்ப கொதிக்கும் பாலில் ஊற்றிக் கிண்டவும். ஜீனியும் சேர்த்துக் கரைந்து திக்காகிக் கொதிக்கும்போது இறக்கி வைத்து ஆறவிடவும்.
கலவை
1 :- பேரீச்சம்பழங்களைப் பொடியாக நறுக்கவும். முந்திரியை நான்காக
ஒடிக்கவும். பாதாம் பருப்புக்களை வெந்நீரில் ஊறவைத்துத் தோல் உரித்து
சீய்த்துக் கொள்ளவும். பிஸ்தாக்களின் தோலை உரித்துக் கொள்ளவும். பேரீச்சை,
கிஸ்மிஸ், பிஸ்தா , பாதாம், முந்திரி, சாரைப்பருப்பு, செம்மாதுளை
முத்துக்கள் இவைகளைக் கலந்து வைத்துக் கொள்ளவும்.
கலவை 2 :- ஆரஞ்ச். சாத்துக்குடி தோல் விதை நீக்கி சுளைகளாக எடுத்துக் கொள்ளவும்.. திராக்ஷைகளை விதை நீக்கவும். பைனாப்பிளை சின்னத் துண்டுகள் செய்யவும். ஐந்தையும் சிறிது ஜீனி தூவிப் புரட்டி வைத்துக் கொள்ளவும்.
கலவை 2 :- ஆரஞ்ச். சாத்துக்குடி தோல் விதை நீக்கி சுளைகளாக எடுத்துக் கொள்ளவும்.. திராக்ஷைகளை விதை நீக்கவும். பைனாப்பிளை சின்னத் துண்டுகள் செய்யவும். ஐந்தையும் சிறிது ஜீனி தூவிப் புரட்டி வைத்துக் கொள்ளவும்.
கலவை 3.:- இதை
சாப்பிட சிறிது முன்னால் தயார் செய்யவும். வாழைப்பழத்தைத் தோலுரித்து
சதுரங்களாக வெட்டவும். ஆப்பிளைத் தோலுரித்து சின்ன சதுரங்களாக வெட்டவும்.
மாம்பழத்தை பெரிய துண்டுகளாக வெட்டவும். பலாச்சுளையை கொட்டை நீக்கி
சதுரங்களாக வெட்டவும். இவைகளைக் கலந்து வைத்துக் கொள்ளவும்.
சாப்பிட ஒரு மணி நேரம் முன்பு காய்ச்சி வைத்திருக்கும்
கஸ்டர்டில் கலவை 3 ஐ சேர்க்கவும். கலந்து பிரிஜ்ஜில் வைத்து அரைமணி நேரம்
கழித்து எடுத்து கலவை 2 ஐ சேர்க்கவும். நன்கு கலந்து பிரிஜ்ஜில் வைக்கவும்.
தேவைப்பட்டால் பழ எசன்ஸ் சேர்க்கவும்.
பரிமாறும் முன்பு கப்புகளில் இந்தப் பழக்கலவை ஒரு பெரிய கரண்டி வைத்து அதன் மேல் கலவை 1 இல் உள்ளதை ஒரு டீஸ்பூன் தூவவும். ஐஸ்க்ரீம் ஒரு ஸ்பூன் வைத்து செர்ரியை அதன் மேல் வைத்து அலங்கரித்துக் கொடுக்கவும்.
பரிமாறும் முன்பு கப்புகளில் இந்தப் பழக்கலவை ஒரு பெரிய கரண்டி வைத்து அதன் மேல் கலவை 1 இல் உள்ளதை ஒரு டீஸ்பூன் தூவவும். ஐஸ்க்ரீம் ஒரு ஸ்பூன் வைத்து செர்ரியை அதன் மேல் வைத்து அலங்கரித்துக் கொடுக்கவும்.
2. முளைவிட்ட பயறு சாலட் :-
தேவையானவை :-
முளைவிட்ட பச்சைப் பயிறு - 1 கப்
பெரிய வெங்காயம் -1 பொடியாக அரியவும்
தக்காளி - 1 பொடியாக அரியவும்..
பச்சை மிளகாய் - 1 பொடியாக அரியவும்,
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்துமல்லி - 1 கைப்பிடி
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1/3 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1/3 டீஸ்பூன்
(தேவைப்பட்டால் ருசிக்கு - பொரி - 2 கைப்பிடி &
காராபூந்தி அல்லது ஓமப்பொடி - 1 டேபிள் ஸ்பூன்.)
.
செய்முறை :-
பச்சைப்
பயிறை ஆவியில் 3 நிமிடம் வேகவிடவும்.. உப்பு பச்சைமிளகாய், வெங்காயம்
தக்காளியைச் சேர்க்கவும். தக்காளி சாஸையும் மிளகுத்தூளையும் சேர்த்து நன்கு
கலக்கவும். கொத்துமல்லியைத் தூவிப் பரிமாறவும்.
ருசிக்கு பொரியும் ஓமப்பொடி/காராபூந்தியும் கலந்து கொடுக்கலாம். பரிமாறும் முன்புதான் இவற்றைச் சேர்க்க வேண்டும்.
3. ஃப்ரூட் சாட்:-
தர்ப்பூசணி - 1 ஸ்லைஸ்
மஞ்சள் கிர்ணி - 1
பப்பாளி - பாதி
கொய்யா - 1
வாழைப்பழம் - 2
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
செய்முறை :-
தர்ப்பூசணி,
கிர்ணி, பப்பாளி, வாழைப்பழத்தின் தோலுரித்து சதுரமாக வெட்டிக் கொள்ளவும்.
கொய்யாவையும் சதுரமாக வெட்டவும். அனைத்தையும் கலந்து சாட் மசாலாவைத் தூவிக்
கொடுக்கவும்.
4. குக்னி சாலட்:-
தேவையானவை :_
குக்னி ( பெரிய வெள்ளரிக்காய் ) - 1
காரட் - 1 சிறிது
வெங்காயம் - 1/2
தக்காளி - 1/2 ( விதையில்லாமல் )
பச்சை மிளகாய் - 1
கொத்துமல்லி - 1 கைப்பிடி
தயிர் - 2 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்.
செய்முறை :-
குக்னியைத்
தோலுரித்துப் பொடியாக அரியவும். காரட், வெங்காயம் தக்காளி, பச்சை
மிளகாயையும் பொடியாக அரியவும். இதில் தயிரையும் உப்பையும் கலந்து
ஊறவைத்துக் கொத்துமல்லி தூவிப் பரிமாறவும்.
5. மிண்ட் மிக்ஸ்ட் சாலட்:-
தேவையானவை :-
அவித்த உருளைக்கிழங்கு - 1
அவித்த காலிஃப்ளவர் பூக்கள் - 15 துண்டுகள்.
தயிர் - 1 கப் ( புளிப்பில்லாதது )
புதினா - 1 கைப்பிடி
கொத்துமல்லி - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
உப்பு - 1/3 டீஸ்பூன்.
எலுமிச்சைச் சாறு - சில துளிகள்
செய்முறை :-
புதினா, கொத்துமல்லி, பச்சை மிளகாயை உப்பு சேர்த்துத் தயிரோடு அரைத்து எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்.
உருளைக்கிழங்கை
சதுரத் துண்டுகளாக்கவும். ஒரு பவுலில் உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர்
பூக்களை மாற்றி மாற்றி அடுக்கி மிண்ட் மிக்ஸை ஊற்றிப் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக