எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 4 அக்டோபர், 2016

பர்ப்பிள் கேபேஜ் சாலட் :- PURPLE CABBAGE SALAD.

ர்ப்பிள் கேபேஜ் சாலட் :-

தேவையானவை :-

வயலட் கேபேஜ் – 250 கிராம், நீளமாக நறுக்கவும். பச்சை அவரை – ஒரு கப், சிவப்புக் குடைமிளகாய் – சின்னம் ஒன்று நீளமாக விதையில்லாமல் நறுக்கவும். பைனாப்பிள் – கால் பாகம் சதுரத் துண்டுகள் செய்யவும், கிஸ்மிஸ் – கால் கப், வறுத்த பாதாம் – கால் கப், புதினா இலை – ஒரு கைப்பிடி, எலுமிச்சை சாறு – ஒரு டேபிள் ஸ்பூன், தேன் – 2 டேபிள் ஸ்பூன், சில்லி கார்லிக் சாஸ் – கால் டீஸ்பூன், தக்காளி – கெச்சப் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:-
பச்சை அவரையை குக்கரில் வேகவைத்து தண்ணீரை வடித்து ஒரு பௌலில் போடவும். நீளமாக அரிந்த வயலட் கோஸ், சிவப்புக் குடைமிளகாய், பைனாப்பிள், கிஸ்மிஸ், ஒன்றிரண்டாகப் பொடித்த பாதாம், பொடியாக அரிந்த புதினா போட்டு அதில் எலுமிச்சை சாறு, தேன் , சில்லி கார்லிக் சாஸ், தக்காளி கெட்சப் சேர்த்து நன்கு கலக்கி சிறிது நேரம் வைத்திருந்து வெண்ணெயில் டோஸ்ட் செய்த ப்ரெட்டுகளுடன் பரிமாறவும்.

தினம் ஒரு கப் வயலட்/ பர்ப்பிள் கேபேஜ் சாலட் சாப்பிடுவதன் மூலம் செரிமானத்தை அதிகப்படுத்த (8 %) குடலுக்குத் தேவையான நார்ச்சத்துக் கிடைக்குது. இரத்தத்தில் கொழுப்புப் படிவதைத் தடுக்குது. அதிகப்படியான கொழுப்பையும் சுத்திகரிச்சு வெளியேற்றிடுது.

85 சதவிகிதம் விட்டமின் சி உள்ளதால் இது ஆண்டி ஆக்ஸிடெண்டாகச் செயல்பட்டு செல்களை டிஎன்ஏவால் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தில் இருந்து காப்பாற்றுது. விட்டமின் ஏ கண்களில் ரெட்டினா பிக்மெண்ட்ஸை உருவாக்குது. இரவிலும் கண்பார்வையை தீட்சண்யமாகவும், உடல் நலத்தை சிறப்பாகவும் பாதுகாக்குது. தொற்று வியாதிகளையும் தடுக்குது.

ஒரு கப் துருவிய வயலட் கேபேஜில் 216 மிகி பொட்டாசியம் இருக்குது. இதைத் தினமும் சாப்பிடுவதால் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கலாம். இதயத்தின் தசைகளில் ஏற்படும் அழுத்தத்தைப் போக்குது. குடல் புண்ணைப் போக்கும். ஹெல்த்தியான ஃபைபர் டயட்.

இதில் இருக்கும் பச்சை அவரை புரத்தச்சத்து மிக்கது. பைனாப்பிள் வாய்ப்புண்ணைப் போக்கும். சிவப்புக் குடைமிளகாய் ஜீரணத்துக்கு உதவுது. புதினா எலுமிச்சைச் சாறு தேன் வாயை சுத்தமாக்கும். புது சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும். 

ிஸ்கி:- ஃபாஃபல் வையைப் பாராட்டியோகுலம் ாசி ிண்டிவம் எஸ். ஷீலா மேரிக்கு நன்றி. :)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...