25. நவராத்திரி – நவரத்ன சுண்டல்
தேவையானவை :- கருப்பு கொண்டைக்கடலை , வெள்ளைக் கொண்டக்கடலை, பாசிப்பயறு, ப்ரவுன் தட்டைப்பயறு, மொச்சை, பச்சைப் பட்டாணி, கொள்ளு, வெள்ளைக் காராமணி, சோயா பீன்ஸ், - தலா ஒரு கைப்பிடி., எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு உளுந்து – தலா – 1 டீஸ்பூன், வரமிளகாய் 4, தேங்காய் – அரை மூடி, உப்பு – அரை டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு.
செய்முறை:- அனைத்து பயறு வகைகளையும் தனித்தனியாக வாசம் வரும்வரை வறுத்துத் தனித்தனியாக முதல்நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் தனித்தனியான கிண்ணங்களில் போட்டுக் குக்கரில் குழையாமல் வேகவைத்து எடுத்து நீரை வடித்து ஒன்று சேர்க்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து கருவேப்பிலை தாளித்துப் வெந்த பயறு வகைகளைக் சேர்த்து உப்புப் போடவும். வரமிளகாயைத் தேங்காய்த்துருவலோடு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து சுண்டலில் போட்டு நன்கு கலந்து நிவேதிக்கவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!