3.ஆவாரம்பூ மசியல்
தேவையானவை:- உலர்ந்த ஆவாரம்பூ – இரு கைப்பிடி, கடலைப்பருப்பு
+ பாசிப்பருப்பு – இரு கைப்பிடி, சின்ன வெங்காயம் – 6, சாம்பார்பொடி – அரை டீஸ்பூன்,
பூண்டு – 1 பல், பச்சை மிளகாய் – 1, சீரகம் – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன்,
தாளிக்க :- எண்ணெய் – 1 டீஸ்பூன், உளுந்து, சீரகம் – தலா அரை டீஸ்பூன், வரமிளகாய்
– 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, பெருங்காயப் பொடி – 1 சிட்டிகை.
செய்முறை:- கடலைப்பருப்பையும், பாசிப்பருப்பையும்
கழுவி முக்கால் கப் நீரில் அரைமணிநேரம் ஊறவைக்கவும். இதை ஊறவைத்த தண்ணீரோடு ப்ரஷர்
பானில் போட்டுப் பொடியாக அரிந்த சின்ன வெங்காயம், தட்டிய பூண்டு, பச்சைமிளகாய் போட்டு
சீரகத்தையும் சாம்பார் பொடியையும் போடவும். இதில் உலர்ந்த ஆவாரம்பூவையும் போட்டு நன்கு
கலக்கி குக்கரில் ஒரு விசில் வரும்வரை வைத்து இறக்கவும். ஆறியதும் திறந்து உப்புச்
சேர்த்து மசித்து எண்ணெயில் உளுந்து, சீரகம், கருவேப்பிலை, பெருங்காயப்பொடி தாளித்துக்
கொட்டவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!