5 ஃப்ருட்ஸ் & ஃப்ளவர்ஸ் சாலட்
தேவையானவை :- பைனாப்பிள் – 1 துண்டு, ஆப்பிள் – பாதி, மஞ்சள் கிர்ணிப்பழம் – 1 துண்டு, பப்பாளி – 1 துண்டு, ஸ்ட்ராபெர்ரி – 6 , செர்ரி – 6 , டூட்டி ஃப்ரூட்டி – 1 டேபிள் ஸ்பூன், பால் – 2 கப், எம் டி ஆர் பாதாம் மிக்ஸ் – 1 டேபிள் ஸ்பூன், கல்கண்டு – 1 டேபிள் ஸ்பூன், குல்கந்து – 1 டேபிள் ஸ்பூன், குல்கந்து இல்லாவிட்டால் ரோஜாப்பூ – 1 + தேன் 1 டேபிள் ஸ்பூன், செம்பருத்தி – 1 பூ, குங்குமப்பூ – 1 சிட்டிகை.
செய்முறை:-
பைனாப்பிள், ஆப்பிள், மஞ்சள் கிர்ணி, பப்பாளி ஆகியவற்றைக் கழுவிச் சுத்தம் செய்து சதுரத் துண்டுகளாக வெட்டி ஒரு பேசினில் போடவும். பாலில் குங்குமப்பூவையும் கல்கண்டையும் போட்டு சுண்டக் காய்ச்சவும். ஒரு டம்ளர் அளவு சுண்டியவுடன் இறக்கி வைத்து எம்டிஆர் பாதம் மிக்ஸ் கலந்து ஆறவிடவும். ஆறு அகல கப்புகளில் பழக் கலவையை வைக்கவும். ஒரு கரண்டி பாதாம் கலவையை ஊற்றவும். அதன் மேல் நான்காக வெட்டிய ஸ்ட்ராபெர்ரி வைத்து நடுவில் செர்ரியை வைத்து சுற்றிலும் டூட்டி ஃப்ரூட்டியால் அலங்கரிக்கவும். குல்கந்து என்றால் அப்படியே சேர்க்கவும். ரோஜாப்பூ என்றால் இதழ்களை உதிர்த்து எல்லாவற்றிலும் தூவி இத்துடன் பொடியாக அரிந்த செம்பருத்தி இதழ்களையும் தூவி ஒரு டீஸ்பூன் தேன் ஊற்றி பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக