பச்சை அவரை குருமா
தேவையானவை:- பச்சை அவரை – 1 கப், பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 1, தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, சோம்பு - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், மிளகு - 6, பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 2 பல், கொத்துமல்லித்தழை - சிறிது , கருவேப்பிலை - 1 இணுக்கு. உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று.
செய்முறை:- வெங்காயம் தக்காளியையும் துண்டுகளாக்கவும். தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு, சீரகம், மிளகு, பொட்டுக்கடலை, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை உப்பு சேர்த்து அரைத்தெடுக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துப் பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை அவரை , கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். ஓரிரு நிமிடம் வதங்கியதும் அரைத்த தேங்காய்க் கலவையை ஊற்றி லேசாகத் திறக்கவும். 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்துப் பச்சை அவரை வெந்ததும் இறக்கி சாதத்தோடு பரிமாறவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!