NEEDED :-
DIOSCOREA BULBIFERA LINN - 1 PIECE.
TURMERIC POWDER - 1 PINCH
OIL - 1 TSP
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
RED CHILLY - 1 NO
CURRY LEAVES - 1 ARK
SALT - 1/2 TSP
METHOD:-
PEEL AND WASH THE DIOSOREA BULBIFERA LINN WELL AND MAKE INTO SLICES. COOK THEM IN HOT WATER WITH SALT AND TURMERIC POWDER TILL TENDER. STRAIN THEM. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL ., CURRY LEAVES AND HALVED CHILLIES. ADD THE SLICES WITH NEEDED SALT. STIRR WELL FOR ONE MINUTE AND SERVE IT WITH VATHAKKZAMBU RICE OR SAMBAR RICE. ITS PREPARED AND SERVED IN CHETTINADU'S PADAIPPUS.
வள்ளிக்கிழங்கு பொரியல்:-
தேவையானவை:-
வள்ளிக்கிழங்கு - 1 துண்டு.
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை.
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 1
கருவேப்பிலை - 1 இணுக்கு.
உப்பு - 1/2 டீஸ்பூன்.
செய்முறை :-
வள்ளிக்கிழங்கைத் தோல் சீவி துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவவும். உப்பும் மஞ்சள் பொடியும் சேர்த்து வேகவிடவும். மென்மையானதும் வடிகட்டவும். பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்துபோட்டு சிவந்ததும்., கருவேப்பிலை., வரமிளகாய் தாளிக்கவும். பின் கிழங்கை சேர்த்து தேவையான உப்பு போட்டு நன்கு ஒருநிமிடம் கிளறி இறக்கவும். வத்தக்குழம்பு., சாம்பார் சாதத்தோடு பரிமாறவும். இது செட்டி நாட்டுப் படைப்புகளில் செய்து பரிமாறப்படும்.
வள்ளிக்கிழங்குன்னா மரவள்ளிக்கிழங்கு தானேக்கா....அம்மாவும் இப்படிதான் செய்வாங்க,நல்லாயிருக்கு!!
பதிலளிநீக்குஇது வெறும் வள்ளிக் கிழங்குடா. இனிப்பா இருக்காது மேனகா.சமைச்சா நல்லா இருக்கும்.:)
பதிலளிநீக்கு