11.ப்ராகோலி புலவ்
தேவையானவ:- பாசுமதி அரிசி – 2 கப், ப்ராகோலி –
1, பட்டர் பீன்ஸ் – ஒரு கைப்பிடி, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2,பச்சை மிளகாய்
– 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன், தயிர் – அரை கப், உப்பு – 1 டீஸ்பூன்,
கொத்துமல்லித் தழை – 1 டேபிள் ஸ்பூன், புதினா – 20 இலை., நெய் – 30 கி, அரைக்க:- முந்திரி
– 4, கசகசா – 1 டீஸ்பூன், தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன், தாளிக்க :- பட்டை கிராம்பு ஏலக்காய்
– தலா 2, சோம்பு – 4 டீஸ்பூன்.
செய்முறை:- பாசுமதி அரிசியைக் களைந்து சிறிது நெய்யில் வறுத்து வைக்கவும். வெங்காயத்தை
நீளமாக நறுக்கவும். தக்காளி, ப்ராகோலியைத் துண்டுகளாக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை
அரைத்து மூன்றரை கப் தண்ணீர் ஊற்றி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெயைக்
காயவைத்து சோம்பு பட்டை கிராம்பு ஏலக்காயைப் போடவும். பொரிந்ததும் வெங்காயத்தை வதக்கி
இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும். லேசாக சிவந்ததும் ப்ராகோலி, பட்டர் பீன்ஸைப் போடவும்.
கிளறிவிட்டு பச்சை மிளகாய் தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும். தயிர் சேர்த்து மூடி
5 நிமிடம் சிம்மில் வேகவிடவும். இதில் அரிசியையும் அரைத்து வடிகட்டிய தேங்காய் முந்திரித்
தண்ணீரையும் சேர்க்கவும். உப்பு போட்டு நன்கு கிளறி குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும்
இறக்கவும். ( அதிகம் வெந்தால் ப்ராகோலி குழைந்துவிடும் ) புதினா கொத்துமல்லியைத் தூவிப்
பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக