15.வாழைப்பூ
சாப்ஸ்
தேவையானவை:- வாழைப்பூ – இரண்டுமடல்களை உரித்து
30 – 40 பூக்களை எடுத்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன், கடலைமாவு
– அரை கப், மைதாமாவு – 1 டேபிள் ஸ்பூன், சோளமாவு – 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள்
– அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், தேங்காய்ப்பால் – அரை கப். எண்ணெய் – பொரிக்கத்
தேவையான அளவு
செய்முறை:- வாழைப்பூவை நரம்பு எடுத்து வெந்நீரில் மூன்று நிமிடம் போட்டு உலர வைக்கவும். உலர்ந்ததும் இதில் இஞ்சி பூண்டு பேஸ்டைத் தடவிப் பிரட்டி வைக்கவும். கடலைமாவு, மைதாமாவு, சோளமாவுடன் உப்பு, மிளகாய்த்தூள், தேங்காய்ப்பால் சேர்த்துப் பஜ்ஜி மாவுப் பதத்தில் கரைக்கவும். தேங்காய்ப்பால் போதாவிட்டால் சிறிது நீர் சேர்த்துப் பிசையவும். எண்ணெயைக் காயவைத்து வாழைப்பூக்களை ஒவ்வொன்றாக எடுத்து மாவில் தோய்த்துப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக