9.வேப்பம்பூ வெல்லப் பச்சடி
தேவையானவை :- வேப்பம்பூ - காயவைத்தது 2 கைப்பிடி, பாசிப்பருப்பு
- 1 கைபிடி, வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன், புளி - 2 சுளை, உப்பு - 1/2 டீஸ்பூன், தாளிக்க:-, நெய் - 2 டீஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், சீரகம் - 1/2
டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1 இரண்டாக கிள்ளி வைக்கவும்.
செய்முறை :- பாசிப்பருப்பை வேகவைக்கவும். அதில்
உப்பு புளியைக் கரைத்து ஊற்றிக் கொதிக்கும்போது நெய்யில் கடுகு , சீரகம், காய்ந்த மிளகாய்,
வேப்பம்பூ ஆகியவற்றைப் பொன்னிறமாக வறுத்துப் போடவும். ஒரு கொதி வந்ததும் வெல்லம் சேர்த்து
இறக்கவும். நீர்க்க இருந்தால் ஒரு டீஸ்பூன் பச்சரிசி மாவு கரைத்து ஊற்றவும். இதில்
உப்பு, புளிப்பு, கசப்பு இனிப்பு காரம் எல்லாம் இருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக