தேவையானவை:- மைதா மாவு - அரை கப், வெள்ளை ரவை - அரை கப், ஆட்டா ( கோதுமை மாவு) - அரை கப், உப்பு - 1/2 டீஸ்பூன். எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:- ரவை, மைதா, கோதுமை மாவுகளை ஒரு பௌலில் போட்டு உப்பு சேர்த்து ஒரு கப் நீர் விட்டு மென்மையாகப் பிசையவும். பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகள் எடுத்து பூரிகளாகத் தேய்த்து எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுக்கவும். சன்னா மசால் ( கறுப்பு அல்லது வெள்ளைக் கொண்டைக்கடலை மசாலாவுடன் ) , வெங்காயத்துடன் பரிமாறவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!