தேவையானவை :- பாசிப்பருப்பு – 1 கப், தினை - 1 டேபிள் ஸ்பூன், தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன், பால் 2 கப். சர்க்கரை – கால் கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை, நெய் – 2 டீஸ்பூன், முந்திரி கிஸ்மிஸ் – தலா 10.
செய்முறை :- பாசிப்பருப்பைக் குக்கரில் பதமாக வேகவைத்து இறக்கவும்.தினையைக் குழைய வேகவைத்து இறக்கவும். இரண்டையும் மசித்து இரண்டு கப் பால் ஊற்றிக் கொதிக்க விடவும். நன்கு கொதிக்கும்போது சீனி சேர்த்து கரைந்ததும் இறக்கவும். ஒரு வாணலியில் நெய்யைக் காயவைத்து முந்திரி கிஸ்மிஸைப் பொரித்தெடுக்கவும். இதில் ஏலப்பொடி, முந்திரி கிஸ்மிஸ் தேங்காய்த் துருவல் கலந்து நிவேதிக்கவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!