கொத்துமல்லி தேங்காய் சம்மந்தி:-
தேவையானவை :- மல்லி - 1 கட்டு, பச்சை மிளகாய் - 4, தேங்காய் - கால் மூடி, சின்ன வெங்காயம் - 2, பூண்டு - 1 பல், புளி - 1 சுளை, உப்பு - கால் தேக்கரண்டி, பெருங்காயம் - 1 துண்டு.
செய்முறை:- மல்லியை சுத்தம் செய்து நன்கு அலசி பொடியாக நறுக்கவும் ( இல்லாவிட்டால் மிக்ஸியில் மாட்டிக் கொள்ளும் ) . வெங்காயம் பூண்டை உரித்து இரண்டாக நறுக்கவும். பச்சை மிளகாய் வெங்காயம் வெள்ளைப்பூண்டு, உப்பு, புளி பெருங்காயத்தை மிக்சியில் சிறிது அரைத்துக் கொண்டு அதன் பின் தேங்காயைச் சேர்த்து அரைத்து அதன் பின் மல்லியை மிக்சி கொள்ளும் வரை சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு மைய அரைத்தெடுக்கவும். சூடான இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும். சாதத்தில் நெய் விட்டு இத்துவையலைப் போட்டுப் பிசைந்தும் சாப்பிடலாம். தயிர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ளவும் அருமையாக இருக்கும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!