எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 15 ஏப்ரல், 2022

மல்லாட்டைச் சட்னி

மல்லாட்டைச் சட்னி



தேவையானவை:- வரமிளகாய் – 3, வேர்க்கடலை வறுத்துத் தோல் நீக்கியது - 1 கைப்பிடி, உப்பு - 1/2 டீஸ்பூன், புளி - 1 சுளை, பெரிய வெங்காயம் – 1, எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - 1/4 டீஸ்பூன், உளுந்து - 1/2 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை:- வெறும் வாணலியில் வரமிளகாய், வேர்க்கடலையை லேசாக வறுக்கவும். அதன் பின் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை நன்கு வதக்கவும். வெங்காயத்துடன் மிளகாய், வேர்க்கடலை, உப்பு, புளி போட்டு நன்கு அரைக்கவும். சட்னி பதத்திற்குத் தேவையான தண்ணீர் ஊற்றவும். ஒரு ஸ்பூன் எண்ணெயில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...