கொத்தவரை வத்தல்
தேவையானவை:- கொத்தவரங்காய்/சீனியவரங்காய் – ஒரு கிலோ, உப்பு – 2 டீஸ்பூன், தயிர் – 1 கப்.
செய்முறை:- கொத்தவரங்காய்களை காம்பு நறுக்கியோ நறுக்காமலோ வத்தல் போடலாம். ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்புப் போட்டுக் கொத்தவரங்காய்களை ஒரு நிமிடம் வேகவைத்து குழைந்துவிடாமல் எடுத்து வடிக்கவும். ஆறியவுடன் தயிரைக் கடைந்து ஊற்றி நன்கு புரட்டி விட்டு ஒற்றை ஒற்றையாகத் தாம்பாளத்தில் பரப்பிக் காயவைத்து எடுக்கவும். இந்த வத்தலைப் பொரித்துச் சாப்பிடலாம்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!