காலிஃப்ளவர் சூப்
தேவையானவை:- காலிஃப்ளவர் – 10 பூ, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, பச்சை மிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, பருப்பு கடைந்த தண்ணீர் – 2 கப், எண்ணெய் – 1 டீஸ்பூன், சோம்பு – ½ டீஸ்பூன், சீரகம் – ½ டீஸ்பூன், மிளகு – ½ டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு, கல்பாசிப்பூ – 1 துண்டு, பட்டை – 1 துண்டு, உப்பு – ½ டீஸ்பூன், கொத்துமல்லித்தழை – சிறிது.
செய்முறை:- காலிஃப்ளவர் பூக்களை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுத்து வைக்கவும். பெரிய வெங்காயம் தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாயைக் கீறி வைக்கவும்.
பானில் எண்ணெயைக் காயவைத்து சோம்பு சீரகம் மிளகு போடவும், இதில் கல்பாசிப்பூ, பட்டை போட்டு அனைத்தும் பொரிந்ததும் கருவேப்பிலை, பச்சை மிளகாய் காலிஃப்ளவர் போட்டு வதக்கவும். ஒரு நிமிடம் வதக்கியபின் வெங்காயம் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். இதில் மஞ்சள் பொடியைப்போட்டு பருப்பு கரைத்த தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடவும். நன்கு கொதித்து வெந்ததும் உப்பு சேர்த்துக் கொத்துமல்லித்தழை தூவி அருந்தக் கொடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக