இன்ஸ்டண்ட் தக்காளி ரசம்.
தேவையானவை:- தக்காளி – 3, துவரம்பருப்பு – 1 டீஸ்பூன், வரமிளகாய் – 1, மிளகு – ½ டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், பூண்டு – 2 பல் , சாம்பார் பொடி – ½ டீஸ்பூன், மஞ்சள் பொடி – ¼ டீஸ்பூன், பெருங்காயம் – சிறு துண்டு, கருவேப்பிலை கொத்துமல்லி – சிறிது, எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு – 1 டீஸ்பூன், வெந்தயம் – ½ டீஸ்பூன், உப்பு – 1 டீஸ்பூன்.
செய்முறை:-மிக்ஸியில் துண்டாக நறுக்கிய தக்காளி, துவரம்பருப்பு, வரமிளகாய், மிளகு, சீரகம், பூண்டு, சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, பெருங்காயம், கருவேப்பிலை, கொத்துமல்லி போட்டு சிறிது தண்ணீர் விட்டு ஒரு நிமிடம் ஓட்டி கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இதை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகும் வெந்தயமும் வறுத்து கரைத்த தக்காளித் தண்ணீரை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கவும். வெந்தயம் போடுவதால் தக்காளியுடன் கொதித்தால் நல்ல ருசி கொடுக்கும். புளி போடாததால் கொதித்தவுடன் இறக்கினாலும் இந்த ரசம் கடுத்துப் போகாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக