தேவையானவை:- பீட்ரூட் – சின்னம் 1, வெள்ளை ரவை - ஒரு கப், ஜீனிப் பவுடர் – 1 கப், பால் – 1கப், தயிர் – அரை கப், பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன், பேக்கிங் சோடா – கால் டீஸ்பூன், நெய் – 3 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:- பீட்ரூட்டைத் தோல்சீவி தூளாகத் திருகி வெறும் வாணலியில் பச்சை வாசம் போக வதக்கி ஆறவிடவும். தயிரை நன்கு அடித்துக் கொள்ளவும். இதில் பீட்ரூட், ஜீனிப் பவுடர், ரவை, பால், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடாவைச் சேர்க்கவும். நன்கு கலக்கி சிறிது நேரம் வைக்கவும். குக்கரில் கீழே ஒரு ஸ்டாண்ட் வைத்து ஐந்து நிமிடம் சூடாக்கவும். ஒரு பேக்கிங் ட்ரேயில் நெய் தடவி ரவை பீட்ரூட் கலவையை ஊற்றி குக்கரில் வைத்து கேஸ்கட், வெயிட் போடாமல் முக்கால் மணி நேரம் மீடியம் நெருப்பில் வேகவைத்து எடுக்கவும். Read more: http://www.mylivesignature.com/mls_wizard2_1.php?sid=54488-89-72B745B7DCD91A6D51CF5145CF29EE5F#ixzz0gZnBC9oU
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக