தேவையானவை :- கோதுமை ரவை – 1 கப், பாசிப்பருப்பு – 1 கைப்பிடி, முளைகட்டிய பயறு – ½ கப் ( ஒரு டீஸ்பூன் பாசிப்பயறு, ஒரு டீஸ்பூன் பச்சைப் பட்டாணி, ஒரு டீஸ்பூன் கொண்டைக்கடலையை ஊறவைத்து துணியில் கட்டி முளை விடச் செய்யவும் ), துருவிய தேங்காய் – 2 டீஸ்பூன்., பச்சைமிளகாய் – 1, இஞ்சி – 1 இன்ச் துண்டு, உப்பு – ½ டீஸ்பூன், நெய் –2 டீஸ்பூன், முந்திரி – 10, உளுந்தம் பருப்பு – ½ டீஸ்பூன், மிளகு – ½ டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு
செய்முறை :- கோதுமைரவையையும் பாசிப்பருப்பையும் வறுத்து 31/2 கப் தண்ணீர் சேர்த்து முளைகட்டிய பயறுவகைகளையும் தேங்காய்த் துருவல், இரண்டாக கீறிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சியுடன் இரண்டு விசில் வரும்வரை குக்கரில் வேகப் போடவும். இறக்கி சூடாக மசித்து உப்பு சேர்க்கவும். நெய்யில் உளுந்து, மிளகு, சீரகம், முந்திரிப் பருப்பு, கருவேப்பிலை தாளித்து கலந்துவிட்டு சிறிது நேரம் மூடிவைத்து பின் உபயோகிக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக