செவ்வாய், 31 டிசம்பர், 2024
தயிர் சேமியா
தேவையானவை :- சேமியா – 1 கப், கெட்டித்தயிர் – 3 கப், பச்சைமிளகாய் – 1, பொடியாக அரிந்த கொத்துமல்லி கருவேப்பிலை – 2 டீஸ்பூன். உப்பு – அரை டீஸ்பூன், மாதுளை முத்துக்கள் – 1 டேபிள் ஸ்பூன், துருவிய காரட் – 2 டீஸ்பூன், கிஸ்மிஸ் முந்திரி – தலா 10.
செய்முறை:- சேமியாவை இரண்டு கப் தண்ணீரில் வேகவைத்து இறக்கி ஆறவிடவும். தயிரில் உப்பு சேர்த்துக் கடைந்து வைக்கவும். இதில் பச்சைமிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, துருவிய காரட், மாதுளை முத்துகளைச் சேர்க்கவும். சேமியாவில் தயிர்க்கலவையைக் கொட்டிக் கிளறி முந்திரி கிஸ்மிஸை மேலாகத் தூவிப் பரிமாறவும்.
சனி, 28 டிசம்பர், 2024
இளந்தோசை
இளந்தோசை
தேவையானவை :- இட்லி அரிசி (வெள்ளைக் கார் (அ) ஐ. ஆர் 20 ) - 2 கப், வெள்ளை உளுந்து - 1/2 கப், வெந்தயம் - 1 டீஸ்பூன்., உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை :- அரிசி உளுந்து வெந்தயம் மூன்றும் ஒன்றாகப் போட்டு 4 5 முறை நன்கு கழுவி ஊறவைக்கவும். கிரைண்டரில் போட்டு நன்கு மாவாக அரைத்து உப்பு சேர்த்து கரைக்கவும். 8 மணி நேரம் புளிக்கவிடவும். தோசைக்கல்லில் எண்ணெய்த் துணியால் தடவி மெல்லிய தோசைகளாகச் சுடவும். மூடி போட்டு வேக வைத்தால் இளசாக வரும்.
வியாழன், 26 டிசம்பர், 2024
வெள்ளைப் பணியாரம்
வெள்ளைப் பணியாரம்
தேவையான பொருட்கள்.:- பணியாரப் பச்சை ( பச்சரிசி ) - 2 ஆழாக்கு தலை தட்டி, வெள்ளை உளுந்து - அரிசியின் மேல் கோபுரமாக ( தோராயமாக 1/4 ஆழாக்கு), உப்பு - 1 டீஸ்பூன், எண்ணெய் - பொறிக்க..
செய்முறை:- அரிசி்யையும் உளுந்தையும் சேர்த்துக் கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். நன்கு மையாக அரைத்து உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். எண்ணெயைக் கடாயில் காயவைத்து மாவை ஒவ்வொரு கரண்டியாக ஊற்றி மேலெழும்பியதும் திருப்பி விட்டு சூடாக எடுக்கவும். .அரை தேக்கரண்டி சீனியும் பாலும் விட்டு மாவை நன்கு அடித்து ஊற்றினால் பணியாரம் மென்மையாக வரும்.
செவ்வாய், 24 டிசம்பர், 2024
ரெங்கோன் புட்டு
ரெங்கோன் புட்டு
தேவையானவை :- வெள்ளை ரவை - 1 கப், பால் - 2 கப், ஜீனி - 1 கப், நெய் - 1/2 கப், துருவிய தேங்காய் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை, ஏலக்காய் – 2, முந்திரிப் பருப்பு - 10
செய்முறை:- ஒரு பானில் நெய்யை ஊற்றி சூடாக்கி முந்திரிப் பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். அதில் ரவையை போட்டு வெதுப்பி சூடான பாலை ஊற்றி சமைக்கவும். ரவை வெந்தவுடன் உப்பு ஒரு சிட்டிகையும்., ஜீனியும் சேர்க்கவும். ஜீனி கரைந்தவுடன் அதில் தேங்காயை சேர்க்கவும். நன்கு இறுகி பக்கங்களில் நெய் பிரியும் போது பொடித்த ஏலக்காயைச் சேர்த்து சூடாக மாலை டிஃபனோடு பரிமாறவும்.
வெள்ளி, 20 டிசம்பர், 2024
பால் பாயாசம்
பால் பாயாசம்
தேவையானவை:- பால் – 2 லிட்டர், பாசுமதி அரிசி – 1 டீஸ்பூன், சீனி – 1 கப்
செய்முறை:- பாலை குக்கரில் கொதிக்க விடவும். அவ்வப்போது கரண்டியால் கிளறிக்கொண்டே இருக்கவும். பாதியாக சுண்டும்போது பாசுமதி அரிசியை மிக்ஸியில் பொடியாக்கி சிறிது பால் விட்டுக் கரைத்துச் சேர்க்கவும். பால் மூன்றில் ஒரு பங்கு திக்காக ஆகும்போது சீனி சேர்த்துக் கரைந்து கொதித்து வாசனை வந்ததும் இறக்கவும்.




