26. பச்சை திராட்சை சட்னி :-
தேவையானவை:- பச்சை திராட்சை – அரை கப்,
சர்க்கரை- கால் கப், எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், இஞ்சி –
துருவியது அரை டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள், சீரகத்தூள் தலா கால்
டீஸ்பூன், தண்ணீர் – அரை கப், எலுமிச்சை சாறு – சில துளிகள்.
செய்முறை:- கடாயில் எண்ணெய் ஊற்றி
கடுகைப் போடவும். வெடித்தவுடன் துருவிய இஞ்சி போட்டு வதக்கி அரை கப் தண்ணீர்
ஊற்றவும். சர்க்கரையைப் போடவும். அது கொதி வரும்போது பச்சை திராட்சையைப் போட்டு
வேக விடவும். வெந்து சுண்டும்போது உப்பு, மிளகாய்த்தூள், சீரகத்தூள் போட்டு இறக்கி
எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக