சுரைக்காய் கடலைப்பருப்பு மசாலாக் கூட்டு.
தேவையானவை :- சுரைக்காய் -1, கடலைப்பருப்பு - 50 கி, வெங்காயம் - 1, தக்காளி - 1, சாம்பார்பொடி - 1 டீஸ்பூன், மஞ்சள் பொடி - 1 சிட்டிகை, பச்சைமிளகாய் - 2, கரம் மசாலா தூள் - கால் டீஸ்பூன். ஆம்சூர் - கால் டீஸ்பூன். உப்பு - அரை டீஸ்பூன், தாளிக்க :- எண்ணெய் - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன்.
செய்முறை:- கடலைப்பருப்பைக் கழுவி அரை கப் தண்ணீரில் போட்டு குக்கரில் இரண்டு மூன்று விசில் வேகவைக்கவும். சுரைக்காயைக் கட்டம் கட்டமாக நறுக்கவும். பெரிய வெங்காயம் தக்காளியையும் நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக வெட்டவும். குக்கரில் வெந்த கடலைப்பருப்பின் மேல் சுரைக்காய், பெரிய வெங்காயம், தக்காளி பச்சைமிளகாய் , சாம்பார் பொடி, கரம் மசாலாபொடி, ஆம்சூர், உப்பு போட்டு நன்கு கலக்கி விட்டு சீரகத்தை எண்ணெயில் தாளித்துப் போட்டு குக்கரை மூடி ஒரு விசில் வைத்து இறக்கவும். ஆறியதும் லேசாக மசித்து சப்பாத்தி, சாதம் போன்றவற்றோடு பரிமாறவும்.

நல்லா இருக்கும் போல... நான் சுரைக்காய் சமைத்ததே இல்லை!
பதிலளிநீக்குசமைத்துப் பாருங்கள் ஸ்ரீராம். சுரைக்காய் தனி ருசி கொடுக்கும் , பீர்க்கங்காய்போல்.
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!