சன்னா மசாலா :-
தேவையானவை :- கருப்புக் கொண்டைக்கடலை - 1 கப், பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 1 , இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மல்லித்தூள் - அரை டீஸ்பூன், தாளிக்க :- எண்ணெய் - 2 டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று., உப்பு - அரை டீஸ்பூன். சீனி - 1 சிட்டிகை.
செய்முறை :- கொண்டக்கடலையைக் கழுவி எட்டு மணி நேரம் ஊறவைத்து பிரஷர் பானில் போட்டு உப்பு சேர்த்து மூன்று விசில் வைத்து வேகவைக்கவும். பெரிய வெங்காயம் தக்காளியைத் தனித்தனியாக அரைத்துக் கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, கருவேப்பிலை தாளித்து அரைத்த வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு பேஸ்டையும் போட்டு சிவக்கும்படி வதக்கவும். அதில் சீனி சேர்த்து மிளகாய், மல்லி பொடியைப் போட்டு அரைத்த தக்காளியைச் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து எண்ணெய் பிரியும்போது வேகவைத்த சன்னாவைச் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விடவும். நன்கு கொதி வந்ததும் மூடி போட்டு ஐந்து நிமிடம் வேகவைத்து இறக்கவும். அலங்கரிக்க பொடியாக அரிந்த வெங்காயம் கொத்துமல்லித் தழை தூவவும். சூடான ரொட்டி, சப்பாத்தி, புல்கா, நான் ஆகியவற்றோடு பரிமாறலாம்.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!